NIOSH துணைத்தலைவராக மணிவண்ணன் நியமனம்
மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கழகமான (NIOSH) துணைத் தலைவராக காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மணிவண்ணன் கோவின் நியமிக்கப்பட்டார்.
தம் மீது நம்பிக்கைக் கொண்டு தமக்கு இப்பொறுப்பினை வழங்கிய பிரதமர் அவர்களுக்குத் தமது மனமார்ந்த நன்றிகளை அவர் தெரிவித்துக் கொண்டார். வளமான வேலை வாய்ப்புகளைக் கொண்ட இத்துறையில் மேலும் பல இந்தியர்கள் ஈடுபட தமது பங்கினை வழங்கவிருப்பதாகவும் திரு. மணிவண்ணன் கூறினார்.
பிரதமர் அன்வார் தலைமையில் சிறந்த மேம்பாட்டினை அடைந்துவரும் தொழில்துறை வளர்ச்சியில் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் எனவும் இதன்மூலம் உயிர் இழப்புக்களும் பொருளிழப்புகளும் தவிர்க்கப்படும் எனவும் நம்பிக்கை அளித்தார்.
பாங்கியில் அமைந்துள்ள நியோஷ் தலைமையகத்திற்கு முதல் அதிகாரப்பூர்வ வருகையினை மேற்கொண்ட திரு மணிவண்ணன் அவர்களை அந்நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி திரு. ஹஜி அயோப் சால்லே வரவேற்று நியோஷின் திட்ட விளக்கவுரை வழங்கினார்.