டாமன்சாராவில் வெ. 5 லட்சம் கண்டெடுத்தார் பாதுகாவலர்

சுபாங் ஜெயா, மார்ச் 22-
நேற்று காலை 8 மணியளவில் டாமன் சாராவிலுள்ள ஒரு பேரங்காடியில் கார் நிறுத்தும் இடத்தில் ஒரு துணி பெட்டி கிடப்பதைக் கண்டு அதை திறந்து பார்த்து, அதில் பணம் இருப்பதைக்கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் பின் ஓமார் தெரிவித்தார்.
அங்கு விரைந்த போலீசார் அந்த பணத்தை மீட்டு சோதனை மேற்கொண்டதில் அதில் 5 லட்சம் வெள்ளி இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த பணம் யாருடையது? யார் கொண்டு வந்து வைத்தது? என்பதை விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பணத்தை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்த பாதுகாவலருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொண்டார்.