குடும்ப வறுமையால் பள்ளிக்கு செல்லாத நான்கு உடன்பிறப்புகளுக்குகல்வியமைச்சர் உடனடி உதவி

( தி.ஆர்.மேத்தியூஸ்)

நிபோங் தெபால், ஜன. 1-
குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்து வரும் 4 உடன் பிறப்புகளுக்கு கல்வியமைச்சரும்,நிபோங் தெபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பஃட்லினா சிடேக் உடனடி உதவிக்கரம் நீட்டினார்.
உடல் செயலிழந்த நிலையில் இருந்து சசிகுமார் இராமசாமி நிறைந்த வருமானமின்றி, தனது நான்கு பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறார்.இந்நிலையில் குடும்பத்தை நேரில் சென்று கண்ட அவர்,நான்கு பிள்ளைகளையும் உடனடியா பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

நான்கு பிள்ளைகளான ச.யோகேஸ்வரன்,ச.தனுஷ்,ச,கோமதா மற்றும் ச.கோமதி ஆகியோரை அருகிலுள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளியிலும் சேர்ப்பதற்கு கேட்டுக் கொண்டுள்ளார்.அதோடு அந்த நான்கு பிள்ளைகளுக்கும் ஓராண்டுக்கு (2024) தேவையான பள்ளி உபகரணங்கள்,அன்றாட உணவுக்கான செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

எந்தவொரு நிரந்தர வருமானமும் இன்றி சிரமத்தில் நிபோங் தெபால் கம்போங் விக்டோரியாவில் வசித்து வரும் சசிகுமார்,சுபாஷினி இந்திரா சேகரன் தம்பதியரின் நிலைமையை நேரில் பார்த்து கண்கலங்கிய கல்வியமைச்சர்,குடும்பத்திற்கு தமது சார்பில் நிதியுதவியும் வழங்கினார்.

கல்வியமைச்சரின் இந்த நல்லெண்ண உதவிக்குப் பிறகு,இந்த நான்கு உடன் பிறப்புகளின் கல்விக்கு உடனடி ஏற்பாடுகளை கவனிப்பதற்கு அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் உறுதியளித்தார்.