வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! – அன்வார்
பல வருட அரசியல் குழப்பங்கள், அரசியல் உறுதியற்ற தன்மை, கோவிட்-19 தொற்றுநோயின் பரவல் மற்றும் தாக்கம், மாறிவரும் பொருளாதார சரிவு ஆகியவற்றில் தொடங்கி, நாடு நிச்சயமற்ற தன்மையிலும் நெருக்கடியிலும் தள்ளப்பட்டது.
எவ்வாறாயினும், எந்தச் சூழ்நிலையிலும் அமைதி மற்றும் நல்வாழ்வு முன்னுரிமையாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன் மாமன்னரின் மாட்சிமை அமைந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழாரம் சூட்டினார்.
சுல்தான் அப்துல்லாவின் பதவிக்காலம் நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்று குறிப்பிட்ட அன்வார், மூன்று பிரதமர்களின் மாற்றங்கள் மூலம் அரசாங்கம் சோதிக்கப்பட்ட நிலையில் திறமையான தலைமைத்துவத்தினால் மாமன்னர் சிறப்பாக வழிநடத்தியதாக கூறினார்.
நாட்டில் நிலவிய அரசியல் முட்டுக்கட்டையை உடைப்பதற்கான ஒரு வழியாக நாட்டில் உள்ள அனைத்து இனங்களையும், அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிக்க அவரது மாட்சிமை இறுதியாக அழைப்பு விடுத்தது என்று குறிப்பிட்ட அன்வார், ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவுவதில் சுல்தான் அப்துல்லாவின் மாட்சிமைக்கு அன்வார் பாராட்டு தெரிவித்தார்!