1500 மாணவர்களின் கல்விக்கு நான் பொறுப்பு! – YB.Young Syefura
புதிய கல்வியாண்டு தொடங்கியிருக்கும் நிலையில் பெந்தோங் மாவட்டத்தில் உள்ள 1500 மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவிகளைப் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யாங் சஃபூரா வழங்கினார். அதிக வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் முதன்மை 100 மாணவர்களுக்கு 15,000 ரிங்கிட் மதிப்பிலான உதவிப் பொருள்களும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் 500 மாணவர்களுக்கு 50,000 ரிங்கிட் ரொக்கப் பண உதவியும், கண் பரிசோதனையை மேற்கொண்டிருக்கும் 500 மாணவர்களுக்கு 50,000 ரிங்கிட் செலவில் புதிய கண்ணாடிகள் மற்றும் கண் பரிசோதனையும் என 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்பில் மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இத்திட்டத்தை முழுமையாக வழிநடத்த பெந்தோங் நாடாளுமன்றத்தில் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டு, முறையான ஆய்வுகள் களப்பணியை மேற்கொண்டு இத்திட்டத்தை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.இத்திட்டத்தின் வாயிலாக பெந்தோங் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1500 மாணவர்கள் பயன்பெற்றதாகவும் இம்மாணவர்கள் முறையாகத் தங்கள் கல்வியைத் தொடர்வதற்குப் போதிய உபகரணங்கள் வழங்குவதோடு மட்டுமல்லாது தமது சிறப்புப் பணிக்குழு அம்மாணவர்கள் கல்வியைத் தொடர்வதையும் உறுதிச் செய்வார்கள் என தெரிவித்தார். கடந்த ஆண்டு 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடராமல் விடுப்பட்டதாகவும் இவ்வாண்டு மாணவர்கள் விடுப்படாமல் கல்வியைத் தொடர் தாம் உறுதுணையாக இருப்பதாகவும் அவர் நம்பிக்கை அளித்தார்.