தமிழ் மலரின் ஒற்றுமை பொங்கல்
|

தமிழ் மலரின் ஒற்றுமை பொங்கல்

லாவண்யா ரவிச்சந்திரன்இஷாந்தினி தமிழரசன்படங்கள்: எம். முருகன் கோலாலம்பூர், ஜன.18-2024 ஆம் ஆண்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ் மலர், ஓம்ஸ் அறவாரியத்தின் இணை ஏற்பாட்டில் ஒற்றுமை பொங்கல் தமிழ் மலர் வளாகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. நாதஸ்வரம் மேளம் முழங்க மூன்று பானைகளில் பொங்கல் வைத்து தை மகளை வரவேற்று ஒற்றுமைப் பொங்கலைத் தமிழ் மலர் கொண்டாடியது.பொங்கல் பொங்கி வந்த வேளையில், பொங்கலோ பொங்கல் என அனைவரும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ச்சியடைந்தது இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.வாழ்வும்…

ஈப்போவில் திருப்புகழ் சபை நிறுவ உதவிகள் வழங்கப்படும்

ஈப்போவில் திருப்புகழ் சபை நிறுவ உதவிகள் வழங்கப்படும்

ஆர்.கிருஷ்ணன் ஈப்போ, ஜன. 3-அண்மையில் நடந்து முடிந்த தமிழராய்ச்சி மாநாட்டில் ஒரு பிரமுகர் இந்து சனாதனம் பற்றி இழிவாக மதிப்பீடு செய்தபோது குறுக்கிட்டு பேச நினைத்தபோது நான் கூற வந்த கருத்தை மறந்துவிட்டு வேறு விசயம் குறித்து பேசி விட்டேன். நான் கூற வந்த கருத்தை இப்பொழுது கூறவுள்ளேன். இவ்வுலகில் பக்தி இலக்கியம்தான் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டு செய்துள்ளதை அனைவரும் உணருதல் அவசியம் என்று மலேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இங்கு நடைபெற்ற அருணகிரிநாதர்…

ஒற்றுமையே நமது பலம்                 -ஓம்ஸ் பா.தியாகராஜன்

ஒற்றுமையே நமது பலம் -ஓம்ஸ் பா.தியாகராஜன்

லாவண்யா ரவிச்சந்திரன்இஷாந்தினி தமிழரசன் படங்கள் : எம்.முருகன் கோலாலம்பூர், ஜன.1 –மலேசிய இந்தியர்களிடையே ஒற்றுமை இருந்தால் தான் நமது பலம் வலிமையடையும். இல்லாவிடில் நமது இலக்குகள் வெற்றி பெற முடியாது என்று ஓம்ஸ் அறாவரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் கூறினார்.சிலாங்கூர் – கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் நடத்திய 2023ஆம் ஆண்டின் 7ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் – வாசகர் மாநாடு டான் ஸ்ரீ கே.ஆர் சோமா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையற்றிய…

மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழக கட்டட நிதிக்கு வெள்ளி 1 லட்சம் நன்கொடை வழங்கினார் ஓம்ஸ் பா.தியாகராஜன்
|

மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழக கட்டட நிதிக்கு வெள்ளி 1 லட்சம் நன்கொடை வழங்கினார் ஓம்ஸ் பா.தியாகராஜன்

சிலாண்டார், ஜன. 1-கடந்த சனிக்கிழமை சிலாண்டார், டேவாண் ஹாங் கஸ்தூரி மண்டபத்தில் மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழகம் ஏற்பாட்டில் போர்க்கலையின் வளர்ச்சி நிதிக்கான விருந்தோம்பல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்வாழ்த்து, போர்க்கலை பாடல், இறைவாழ்த்து பாடலுக்கு பிறகு நடனமணியின் நடனம் நடைபெற்றது. தொடர்ந்து ஏற்பாட்டுக்குழு செயலாளர் வரவேற்புரையாற்றினார்.தொடர்ந்து நிகழ்வில் அதி மஹா ருத்ரவீரன் கிரண்ட் மாஸ்டர் என். முரளிதரன் சிறப்புரையாற்றினார். நிகழ்வுக்குச் சிறப்பு வருகை புரிந்த ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்புரையாற்றினார்….

புத்தாண்டே வருக… புது பொலிவை தருக…
|

புத்தாண்டே வருக… புது பொலிவை தருக…

புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரினை வேரோடு சாய்ப்போம் என்று வைர வரிகளோடு இருகரம் கூப்பி 2024 புத்தாண்டை வரவேற்கின்றனர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய மாணவர்கள். இந்தப் புத்தாண்டு புதியதோர் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஒற்றுமை உணர்வையும் மேலோங்க செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களான சர்வேந்திரன் சந்தர், ரினிஷா விஜயகுமார், சக்தி மூர்த்தி, லாவண்யா ரவிச்சந்திரன், ஹரிணி கருணாகரன், ஹரி கண்ணன், நளன் குணாளன், தீபன் தினகரன், சுவர்ணா விமலெசன், லோகனபிரியா சிவக்குமார், கஜலெட்சுமி சரவணன், சித்ரா…