தாய்மொழிப் பள்ளிகளால் ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறதுதீவிரவாதச் சிந்தனைகளுக்கு இடமில்லை
|

தாய்மொழிப் பள்ளிகளால் ஒற்றுமை உணர்வு மேலோங்குகிறதுதீவிரவாதச் சிந்தனைகளுக்கு இடமில்லை

பெஸ்தாரி ஜெயா, மார்ச் 21-இந்நாட்டில் ஒற்றுமையாக தாய்மொழிப் பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது அதுகுறித்த தீவிரவாதச் சிந்தனைகள் கொண்ட கருத்துகளைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அமாட் கூறினார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலசிலாங்கூர் மண்ணின் மைந்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஸுல்கிப்ளி மேற்கண்டவாறு பேசினார்.மலேசியாவில் தாய்மொழிக் கல்வி என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. அது குறித்து யாரும் எவ்வித கருத்தையும் எதிர்மறையாகப் பேசக்கூடாது. தமிழ்ப்பள்ளிகளும் சீனப்பள்ளிகளும்…

சமய தீவிரவாதம் தொடர்ந்தால்மலேசியா வீழ்ச்சியடைந்துவிடும் இயக்கவாதி எச்சரிக்கை
|

சமய தீவிரவாதம் தொடர்ந்தால்மலேசியா வீழ்ச்சியடைந்துவிடும் இயக்கவாதி எச்சரிக்கை

கோலாலம்பூர், மார்ச் 21-சமய சகிப்பின்மையையும் தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்தாவிட்டால், மலேசியா ஒரு தோல்வியடைந்த நாடாக மாறும் அபாயம் உள்ளது என்று இயக்கவாதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதிகரித்துவரும் இன மற்றும் சமய சகிப்பின்மை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் மிரட்டலை ஏற்படுத்தியுள்ளது என்று “குளோபல் ஹியூமன் ரைட்ஸ் ஃபவுண்டேஷன்” எனும் மனித உரிமைகள் அமைப்பின் துணைத் தலைவர் பீட்டர் ஜான் ஜபான் தெரிவித்தார். மலேசியாவில் இப்போது இனவாதம் பரவலாகவும் நீடித்து வருவதாகவும் உள்ளது. இது நாட்டைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது என்று…

இந்தியர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டுவரும் திட்டங்கள் மீது மித்ரா தனிக் கவனம் செலுத்தும்
|

இந்தியர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டுவரும் திட்டங்கள் மீது மித்ரா தனிக் கவனம் செலுத்தும்

புத்ராஜெயா, மார்ச் 21-இந்திய சமூகத்திற்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் மீது மித்ராவின் ( மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு ) செயல்திட்ட பயிலரங்கு தனிக் கவனம் செலுத்தும் என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் ஏரன் அகோ டாகாங் நேற்று தெரிவித்தார். “மித்ரா முகமை என்னுடைய அமைச்சின்கீழ் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. மித்ரா செயல்பாட்டு இலக்கின் மீது மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.கடந்த 2021ஆம் ஆண்டின் இந்திய சமூக நடவடிக்கைத் திட்டத்தில் (பிடிஎம்ஐ)…

பேராவில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஆண்டு தோறும் ரிம10 மில்லியன் நிதி உதவி
|

பேராவில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஆண்டு தோறும் ரிம10 மில்லியன் நிதி உதவி

டிகே.மூர்த்தி தெலுக் இந்தான், மார்ச் 20-மக்களுக்காக வழங்கப்படும் அரசாங்க நிதி உதவித் திட்டத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணியில் மோசடி நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக என்னிடமோ அல்லது ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனிடமோ புகார் வழங்கினால் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம் என பாசிர் பெர்டாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ காஹ் லியோங் தெரிவித்தார். நேற்று 19.3.2024 இல் தெலுக் இந்தான் நாடாளுமன்றம் ஜாலான் லக்ஸமணாவில் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோயில் புதியக்கட்டடத் திருப்பணிக்கு அமைச்சர் ஙா கோர் மிங்…

இந்தியர்களுக்கு 2,500 மெட்ரிகுலேஷன்இடங்களை ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு செனட்டர் சிவராஜ் வலியுறுத்தல்
|

இந்தியர்களுக்கு 2,500 மெட்ரிகுலேஷன்இடங்களை ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு செனட்டர் சிவராஜ் வலியுறுத்தல்

கோலாலம்பூர், மார்ச் 20-இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் தமது கடப்பாட்டை நிரூபிக்க இந்திய சமூகத்திற்கு 2,500 மெட்ரிகுலேஷன் இடங்களை ஒதுக்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அரசாங்க மேலவை உறுப்பினர் சி.சிவராஜ் வலியுறுத்தியுள்ளார். இதனால், மலாய்க்காரர்களின் ஆதரவை இழக்க வேண்டிவரும் என்று அன்வார் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்திய சமூகம் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பதும் இதுபோன்ற உதவி அச்சமூகத்திற்குத் தேவைப்படுகிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும் என்றும் சிவராஜ் சுட்டிக் காட்டினார்.பிரதமர் எனும் வகையில் அனைத்து இனங்களையும்…

“தேனிலவு முடியப் போகிறது; இனிமேல்தான் என்னுடைய ஆட்சி தொடங்கும்”
|

“தேனிலவு முடியப் போகிறது; இனிமேல்தான் என்னுடைய ஆட்சி தொடங்கும்”

கோலாலம்பூர், மார்ச் 20-பேரரசர் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழிந்து விட்டன. இனிமேல்தான், என்னுடைய அசல் பாணியிலான ஆட்சி தொடங்கப் போகிறது என்று மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.தேனிலவு கிட்டத்தட்ட முடிவடையும் தறுவாயில் உள்ளது. பேரரசர் பொறுப்புக்கு வந்த இரண்டு மாதங்கள் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாள்களே எஞ்சியுள்ளன. தேனிலவுக் காலம் முடிவடைந்தவுடன் நாட்டுத் தலைவர் எனும் வகையில் அசல் பாணியிலான எனது கண்காணிப்புப் பணியை மேற்கொள்வேன் என்றார்…

1500 மாணவர்களின் கல்விக்கு நான் பொறுப்பு! – YB.Young Syefura
|

1500 மாணவர்களின் கல்விக்கு நான் பொறுப்பு! – YB.Young Syefura

புதிய கல்வியாண்டு தொடங்கியிருக்கும் நிலையில் பெந்தோங் மாவட்டத்தில் உள்ள 1500 மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவிகளைப் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யாங் சஃபூரா வழங்கினார். அதிக வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் முதன்மை 100 மாணவர்களுக்கு 15,000 ரிங்கிட் மதிப்பிலான உதவிப் பொருள்களும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் 500 மாணவர்களுக்கு 50,000 ரிங்கிட் ரொக்கப் பண உதவியும், கண் பரிசோதனையை மேற்கொண்டிருக்கும் 500 மாணவர்களுக்கு 50,000 ரிங்கிட் செலவில் புதிய கண்ணாடிகள் மற்றும் கண் பரிசோதனையும் என 1 லட்சத்து…

தமிழ்ப்பள்ளியைச் சீண்டும் அம்னோ! எச்சரிக்கும் டி.ஏ.பி!
|

தமிழ்ப்பள்ளியைச் சீண்டும் அம்னோ! எச்சரிக்கும் டி.ஏ.பி!

மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் ஒரே மலேசிய மக்களின் ஒற்றுமைத்துவத்தைச் சீர்குலைப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Akmal salleh தெரிவித்தது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் Bukit Gasing சட்டமன்ற உறுப்பினர் Rajiv Rishyakaran கடும் கண்டனத்தையும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Akmal salleh ஐ, நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். Bukit Gasing சட்டமன்ற உறுப்பினர் Rajiv Rishyakaran, Let’s have coffee. I’ll belanja என தெரிவித்தது மீண்டும் டி.ஏ.பிக்கும் அம்னோவுக்கும் இடையே…

இந்தியாவுடன் தொடர்புடைய மலேசியப் போதைப்பொருள் மன்னன்?
| |

இந்தியாவுடன் தொடர்புடைய மலேசியப் போதைப்பொருள் மன்னன்?

கடந்த சனிக்கிழமை இந்தியாவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட Jaffer Sadiq க்கு தலைவனாக இருந்து செயல்பட்டதாக மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் தொடர்பில் இருப்பதாக Jaffer Sadiq வாக்குமூலம் அளித்துள்ளதாக மலேசியக் காவல் படை தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார். தற்போது யார் அந்த மலேசியர் எனும் கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. Jaffer Sadiq தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சியிந் தொடர்புடையவராக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது மலேசியருக்கும் தொடர்பு…

இந்துக்களையும் மதத்தையும் இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
|

இந்துக்களையும் மதத்தையும் இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

கோலாலம்பூர், மார்ச் 4-இந்து மதத்தைச் சார்ந்தவர்களை குறிப்பாக ஆண்டாள், கம்பர், கம்பராமாயணத்தைத் தாக்கிப் பேசியதன் காரணமாக கவிஞர் வைரமுத்துவின் மலேசிய வருகையை இங்குள்ள இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.நேற்று தமிழ் மலரின் முதல் பக்கச் செய்தியில் மஹிமா எனப்படும் மலேசிய இந்து கோயில்களின் அமைப்புச் செயலாளர் பாலகுருநாதனின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த செய்தியை கண்ணுற்ற நாட்டில் உள்ள இந்து அமைப்புகள், தமிழ் மலரைத் தொடர்பு கொண்டு வைரமுத்து இந்த நாட்டுக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து…