12 மாணவர்கள் தமிழ் இலக்கியத் தேர்வு எழுத அனுமதி மறுப்பா?
லாவண்யா ரவிச்சந்திரன் கோலாலம்பூர், பிப்.2-ஜனவரி 30 முதல் 2023 ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு தொடங்கியுள்ள வேளையில் கெடா, பிடோங் இடைநிலைப்பள்ளியில் பயிலும் 12 மாணவர்கள் தமிழ் இலக்கியப் பாடம் எடுப்பதற்கான தேர்வு சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை என்றும் அப்பாடத்தை எடுப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தமிழ் மலர் செய்தியாளரைத் தொடர்புக் கொண்ட போது அம்மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் எஸ்.பி.எம் தேர்வு பாடங்கள் பதிவு பாரத்தை விண்ணப்பிக்கும் போது தேர்வு பாரத்தை அனுப்புவதில்…