எதற்காக தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்ய வேண்டும்?
ஜோர்ஜ்டவுன், ஜன. 8 –பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தற்போது தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டுள்ளது குறித்து தாம் தெரிவித்திருக்கும் கருத்துகள் தொடர்பில், அவ்வாரியத் தலைவர் பதவியை தாம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை அதன் தலைவர் ஆர்எஸ்என் ராயர் நிராகரித்துள்ளார். அவ்வாரியம் புதிய அமைச்சின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாக, தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்த பின்னர், அது குறித்து ராயர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பொதுமக்களை குழப்பமடையச் செய்திருப்பதாக, அவ்வாரியத்தின் முன்னாள் அறங்காவலரும்…