ஜப்பான் நிலநடுக்கம் – அரசாங்கம் நிலைமையைக் கண்காணிக்கிறது! – அன்வார்
|

ஜப்பான் நிலநடுக்கம் – அரசாங்கம் நிலைமையைக் கண்காணிக்கிறது! – அன்வார்

ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இஷிகாவா பகுதியில் உள்ள மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் தங்கள் ஆறுதலைத் தெரிவித்தனர். வெளியுறவு அமைச்சு மற்றும் ஜப்பானில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து வருவதாக அன்வார் தமது முக நூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடினமான மற்றும் சவாலான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிமையும் பொறுமையும் அமையட்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக,…

முன்னாள் பிரதமர் – இரண்டு தனி செயலாளர்களுக்கு எம்.ஏ.சி.சி சம்மன்
|

முன்னாள் பிரதமர் – இரண்டு தனி செயலாளர்களுக்கு எம்.ஏ.சி.சி சம்மன்

கோலாலம்பூர், ஜன. 2-மில்லியன் கணக்கான பண மோசடி தொடர்பாக விசாரணைக்கு உதவும் பொருட்டு முன்னாள் பிரதமருக்கும் அவரின் இரண்டு தனி செயலாளர்களுக்கும் எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்த வாரம் சம்மங்களை அனுப்பும் என்று அது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர், ஒரு நாடளுமன்ற உறுப்பினர் இருவரும் அந்த அறவாரியத்தின் புரவலர்கள் என்று இணையத்தளம் ஒன்றில் தெரிவித்துள்ளது.அவரும் அவரின் மனைவி, குழந்தைகள் ஆகியோர் சொத்துக் குவித்துள்ள சந்தேகம் காரணமாக எம்.ஏ.சி.சி விசாரணை…

ஜப்பானில் பலத்த நிலநடுக்கம், சுனாமிகட்டடங்கள் இடிந்து விழுந்தன
|

ஜப்பானில் பலத்த நிலநடுக்கம், சுனாமிகட்டடங்கள் இடிந்து விழுந்தன

தோக்கியோ, ஜன. 2-ஜப்பானின் மத்திய பகுதியை 7.6ஆற்றல் கொண்ட பலத்த நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து அந்நாட்டின் மேற்குக் கரையோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின. ஒரு மீட்டருக்கும் உயரமான சுனாமி அலைகள் கரையோரத்தைத் தாக்கத் தொடங்கியுள்ளன. அதைவிட பெரிய அலைகள் அங்கு தாக்கலாம் என்று அரசாங்க ஒளிரப்புக் கழகமான என்எச்கே குறிப்பிட்டது,பலத்த நிலநடுக்கத்தால் இஷிகாவா மாவட்டத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.அருகில் உள்ள தலைநகர் தோக்கியோவில் கடுமையான நிலஅதிர்வுகள் ஏற்பட்டன என்றும் அதில் கட்டடங்கள் குலுங்கின என்றும்…

பிரிக்பீல்ட்ஸில் 174 இந்தியப் பிரஜைகள் உட்பட அந்நிய நாட்டவர்கள் கைது
|

பிரிக்பீல்ட்ஸில் 174 இந்தியப் பிரஜைகள் உட்பட அந்நிய நாட்டவர்கள் கைது

கோலாலம்பூர், ஜன. 2-தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் நேற்று புத்தாண்டு அன்று குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளக் குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டனர். ஜாலான் தம்பி அப்துல்லாவில் உள்ள 30 இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் 224 அதிகாரிகளும் பல்வேறு ஏஜென்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.நேற்று மதியம் 1.00 மணியளவில் ஓப்ராசி சாபு எனும் பெயரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறை நடவடிக்கைப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர்…

குடும்ப வறுமையால் பள்ளிக்கு செல்லாத நான்கு உடன்பிறப்புகளுக்குகல்வியமைச்சர் உடனடி உதவி
|

குடும்ப வறுமையால் பள்ளிக்கு செல்லாத நான்கு உடன்பிறப்புகளுக்குகல்வியமைச்சர் உடனடி உதவி

( தி.ஆர்.மேத்தியூஸ்) நிபோங் தெபால், ஜன. 1-குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்து வரும் 4 உடன் பிறப்புகளுக்கு கல்வியமைச்சரும்,நிபோங் தெபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான பஃட்லினா சிடேக் உடனடி உதவிக்கரம் நீட்டினார்.உடல் செயலிழந்த நிலையில் இருந்து சசிகுமார் இராமசாமி நிறைந்த வருமானமின்றி, தனது நான்கு பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறார்.இந்நிலையில் குடும்பத்தை நேரில் சென்று கண்ட அவர்,நான்கு பிள்ளைகளையும் உடனடியா பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். நான்கு…

ஒருமைப்பாட்டுடைய சமுதாயமாக திகழ்வோம்
|

ஒருமைப்பாட்டுடைய சமுதாயமாக திகழ்வோம்

கோலாலம்பூர், ஜன.1-மலேசிய சமுதாயம் ஒருமைப்பாட்டுடைய சமுதாயமாக திகழ வேண்டும். மேன்மைக்குரிய சமுதாயமாகவும் விளங்க வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்தச் சமுதாயத்தின் பங்களிப்பு என்பது இன்றியமையாததாகும்.பிறந்துள்ள புத்தாண்டு நாட்டு மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு நன்மை தரும் ஆண்டாக இருக்கும் என்று தாம் நம்புவதாக ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு முழுவதும் நாம் சாதித்தவற்றையும் சாதிக்காதவற்றையும் ஒருமுறை நினைத்து பார்த்து புதிய ஆண்டில் புதிய சிந்தனையோடு நாம் காரியங்கள்…

வெற்றி நிச்சயமென புத்தாண்டை வரவேற்போம்
|

வெற்றி நிச்சயமென புத்தாண்டை வரவேற்போம்

கோலாலம்பூர், ஜன.1-வெற்றி நிச்சயம் என்னும் கருப்பொருளோடு 2024 புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். இன்று மலர்ந்த புத்தாண்டில், நம் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து இனிதே இந்த ஆண்டை வரவேற்போம். நாம் கடந்து வந்த பாதையின் அனுபவத்தைக் கொண்டு, புதிய ஆண்டை வரவேற்போம். புதிய வெளிச்சத்தை பாய்ச்சுவோம். 2024ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே…

பேரரசர் தம்பதியரின் புத்தாண்டு வாழ்த்து
|

பேரரசர் தம்பதியரின் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஜன. 1-மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா அமாட் ஷாவும் அவரின் துணைவியார் பேரரசி ராஜா பெர்மைசூரி துங்கு அஸிஸா அமினா மைமூனா இஸ்கண்டாரியாவும் மலேசியர்கள் அனைவருக்கும் தங்களின் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.இன்று பிறந்துள்ள 2024 புத்தாண்டில் நாடும் மக்களும் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்று தாங்கள் பிரார்த்திப்பதாகவும் பேரரசர் தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்.நாட்டில் தொடர்ந்து ஒற்றுமையும் நல்லிணக்கமும் நீடித்துவர வேண்டுமென்று தாங்கள் வேண்டிக் கொள்வதாகவும் இஸ்தானா நெகாராவின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட…

‘துபாய் மூவ்’ – அன்வாரின் ஆட்சியைக் கவிழ்க்க புதிய சதியா?
|

‘துபாய் மூவ்’ – அன்வாரின் ஆட்சியைக் கவிழ்க்க புதிய சதியா?

‘துபாய் மூவ்’ என்று புதிதாகப் பேசப்படும் ஒரு கூற்று வெறும் ‘மைண்ட் கேம்: என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் துவான் இப்ராஹிம் துவான் மான் மற்றும் வான் அமாட் ஃபய்சல் வான் அமாட் கமால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதன் மூலன் அரசாங்கம் மிகவும் அழுத்தமான விஷயங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மற்றும் பெர்சத்து இளைஞர் தலைவர் வான் அமாட் ஃபைசல்…

நமக்குள் ஒற்றுமை இருந்தால் எல்லாரும் பறந்தோடி வருவார்கள்!
|

நமக்குள் ஒற்றுமை இருந்தால் எல்லாரும் பறந்தோடி வருவார்கள்!

ஜொகூர், குளுவாங் கம்போங் ம.இ.காவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஸ்ரீ ஜெய சுப்ரமணியர் ஆலய நிர்மாணிப்புப் பணிக்கான நிதி திரட்டும்  நிகழ்வு நேற்று முன்தினம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. ஆடல், பாடல் விருந்துபசரிப்போடு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்பு வருகை புரிந்தார். முன்னதாக ஆலய நிர்வாகத்தின் சார்பில் ஓம்ஸ் பா.தியாகராஜனுக்குச் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்வில் அவ்வட்டாரத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன் “கம்போங்…