மித்ரா நிதியுதவியுடன் பகாங்கில் இலவசப் பேச்சுக்கலைப் பயிலரங்கம்!
கடந்த ஆண்டு மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தால் தொடக்கி வைக்கப்பட்ட தேசிய அளவிலான பேச்சுக்கலைப் பயிலரங்கு, இவ்வாண்டு ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் மித்ராவின் நிதி ஆதரவுடன் மீண்டும் பகாங் மாநிலம் முழுக்க 5 மாவட்டங்களில் தமிழ் மற்றும் மலாய் மொழிகளில் நடத்தப்படுவதாக மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர் சு.சுரேந்திரன் தெரிவித்தார்.இப்பட்டறை முதற்கட்டமாகத் தெமர்லோ மாவட்டத்தின் மெந்தகாப் குழுவகத் தமிழ்ப்பள்ளியில் நடத்தப்பட்டது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குப் பேச்சாற்றலை மேம்படுத்தும் திறன், தமிழ், மலாய் மொழி…