லஞ்ச ஊழல் விசாரணையில் முன்னாள் தலைவர்கள் “குறி”வைக்கப்படவில்லை
இஸ்கண்டார் புத்ரி, ஜன. 12 –லஞ்ச ஊழல் தொடர்பில், மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தினால் (எம்ஏசிசி) விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக அரசாங்கம் எந்த ஒரு முன்னாள் தலைவர் மீதும் பிரத்தியேகமாக குறி வைத்திருக்கவில்லை என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். இதற்கு மாறாக, ஒருவரின் அந்தஸ்து மற்றும் பதவியைப் பார்க்காமல், லஞ்ச ஊழலைத் துடைத் தொழிப்பதற்காக தனக்கு வழங்கப்பட்டிருக்கும் கடமையைத்தான் எம்ஏசிசி ஆற்றி வருவதாக அன்வார் குறிப்பிட்டார். “அது எம்ஏசிசியின் பணி….