மித்ரா தலைவராகும் இளைஞர்! YB ப.பிரபாகரனை நியமித்த பிரதமர்!
மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் புதிய தலைவராக மலேசியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் பரமேஸ்வரன் நியமிக்கப்படுவதாகப் பிரதமர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைவராக இருந்த ரமணன் ராமகிருஷ்ணன் தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சராகப் பொறுப்பேற்றதால் இந்த மாற்றும் நிகழ்ந்திருப்பதாக பிரதமர் துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இனி மித்ராவின் தலைவராகப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவார்…