NIOSH துணைத்தலைவராக மணிவண்ணன் நியமனம்
|

NIOSH துணைத்தலைவராக மணிவண்ணன் நியமனம்

மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கழகமான (NIOSH)  துணைத் தலைவராக காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மணிவண்ணன் கோவின் நியமிக்கப்பட்டார். தம் மீது நம்பிக்கைக் கொண்டு தமக்கு இப்பொறுப்பினை வழங்கிய பிரதமர் அவர்களுக்குத் தமது மனமார்ந்த நன்றிகளை அவர் தெரிவித்துக் கொண்டார். வளமான வேலை வாய்ப்புகளைக் கொண்ட இத்துறையில் மேலும் பல இந்தியர்கள் ஈடுபட தமது பங்கினை வழங்கவிருப்பதாகவும் திரு. மணிவண்ணன் கூறினார். பிரதமர் அன்வார் தலைமையில் சிறந்த…

1500 மாணவர்களின் கல்விக்கு நான் பொறுப்பு! – YB.Young Syefura
|

1500 மாணவர்களின் கல்விக்கு நான் பொறுப்பு! – YB.Young Syefura

புதிய கல்வியாண்டு தொடங்கியிருக்கும் நிலையில் பெந்தோங் மாவட்டத்தில் உள்ள 1500 மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவிகளைப் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யாங் சஃபூரா வழங்கினார். அதிக வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் முதன்மை 100 மாணவர்களுக்கு 15,000 ரிங்கிட் மதிப்பிலான உதவிப் பொருள்களும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் 500 மாணவர்களுக்கு 50,000 ரிங்கிட் ரொக்கப் பண உதவியும், கண் பரிசோதனையை மேற்கொண்டிருக்கும் 500 மாணவர்களுக்கு 50,000 ரிங்கிட் செலவில் புதிய கண்ணாடிகள் மற்றும் கண் பரிசோதனையும் என 1 லட்சத்து…

தமிழ்ப்பள்ளியைச் சீண்டும் அம்னோ! எச்சரிக்கும் டி.ஏ.பி!
|

தமிழ்ப்பள்ளியைச் சீண்டும் அம்னோ! எச்சரிக்கும் டி.ஏ.பி!

மலேசியாவில் தாய்மொழிப் பள்ளிகள் ஒரே மலேசிய மக்களின் ஒற்றுமைத்துவத்தைச் சீர்குலைப்பதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Akmal salleh தெரிவித்தது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் Bukit Gasing சட்டமன்ற உறுப்பினர் Rajiv Rishyakaran கடும் கண்டனத்தையும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Akmal salleh ஐ, நேரடி விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். Bukit Gasing சட்டமன்ற உறுப்பினர் Rajiv Rishyakaran, Let’s have coffee. I’ll belanja என தெரிவித்தது மீண்டும் டி.ஏ.பிக்கும் அம்னோவுக்கும் இடையே…

இந்தியாவுடன் தொடர்புடைய மலேசியப் போதைப்பொருள் மன்னன்?
| |

இந்தியாவுடன் தொடர்புடைய மலேசியப் போதைப்பொருள் மன்னன்?

கடந்த சனிக்கிழமை இந்தியாவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட Jaffer Sadiq க்கு தலைவனாக இருந்து செயல்பட்டதாக மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் தொடர்பில் இருப்பதாக Jaffer Sadiq வாக்குமூலம் அளித்துள்ளதாக மலேசியக் காவல் படை தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார். தற்போது யார் அந்த மலேசியர் எனும் கேள்வி பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. Jaffer Sadiq தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் கட்சியிந் தொடர்புடையவராக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில். தற்போது மலேசியருக்கும் தொடர்பு…

மித்ராவில் புதிய தலைமை இயக்குநர் நியமனம்!
|

மித்ராவில் புதிய தலைமை இயக்குநர் நியமனம்!

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் புதிய தலைமை இயக்குநராக இரவிக்குமார் சுப்பையா நியமிக்கப்பட்டுள்ளார். மித்ராவின் புதிய இலக்குகள் மற்றும் செயல்முறைகள் தொடர்பாக நேற்று ஒற்றுமை துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சமூக உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைமை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கும் ரவிக்குமார் சுப்பையா அவர்களின் நியமனமானது, அரசு பொதுச் சேவை ஊழியர் துறையின் நேரடி நியமனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய இந்தியர்களின் அடிப்படை சிக்கல்களைக் கலைத்து மித்ராவின்…

தமிழ் அறவாரியத்தின் உலகத் தாய்மொழி நாள்
|

தமிழ் அறவாரியத்தின் உலகத் தாய்மொழி நாள்

ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுக்க பிப்ரவரி 21 ஆம் நாள் உலகத் தாய்மொழி நாள் பிப்ரவரி 21 கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் அறவாரியத்தின் தலைமையில் மலேசிய இக்ராம் அமைப்பு (IKRAM), LLG எனப்படும் மலேசியக் கலாச்சார மேம்பாட்டு மையம், மலேசியன் நேட்டிவ் நெட்வொர்க் (JOAS), மலேசியச் சீனப் பள்ளிகள் மேலாண்மை வாரியக் கூட்டமைப்பு (DONG ZONG), KLSCAH எனப்படும் கோலாலம்பூர் சிலாங்கூர் சீனப் பல்நோக்கு மண்டபம், மலேசியச் சீனப்பள்ளி ஆசிரியர் சங்கம் என மலேசியாவில் 8…

ZAHID HAMIDI மீது மகாதீர் வழக்கு!
|

ZAHID HAMIDI மீது மகாதீர் வழக்கு!

மகாதீர் பிறப்பால் ஒரு மலாய்க்காரர் இல்லை என துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான  ZAHID HAMIDI கருத்து தெரிவித்த நிலையில் ZAHID HAMIDI மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டதாக மகாதீரின் வழக்கறிஞர் Mior Nor Haidir Suhaimi தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மகாதீரைக் குறித்து பேசும் போது மகாதீரைக் குறிப்பிடுவதற்காகக் குட்டி எனும் அடைமொழியை அவர் பயன்படுத்தியதாகவும் இது கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி KELANA JAYA வில் நடந்த அம்னோ…

மித்ரா தலைவராகும் இளைஞர்! YB ப.பிரபாகரனை நியமித்த பிரதமர்!
|

மித்ரா தலைவராகும் இளைஞர்! YB ப.பிரபாகரனை நியமித்த பிரதமர்!

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் புதிய தலைவராக மலேசியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் பரமேஸ்வரன் நியமிக்கப்படுவதாகப் பிரதமர் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் தலைவராக இருந்த ரமணன் ராமகிருஷ்ணன் தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சராகப் பொறுப்பேற்றதால் இந்த மாற்றும் நிகழ்ந்திருப்பதாக பிரதமர் துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இனி மித்ராவின் தலைவராகப் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவார்…

இஸ்மாவின் மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.
|

இஸ்மாவின் மீண்டும் பள்ளிக்குப் போகலாம்.

2024 ஆம் ஆண்டுப் பள்ளிக் காலாண்டு தொடங்கவிருக்கும் நிலையில் பாங்கி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் 60 மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷரிட்சான், காஜாங் நகராண்மைக் கழக ஆட்சியர் சங்கிதா சந்திரமோகன், தொழிலதிபர் டத்தோ பிரபாகரன், இஸ்மா தலைவர் கவிதா செல்வின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் வாயிலாகச் சுமார் 60 மாணவர்களுக்கு ரி.ம.50 மதிப்பிலான மைடீன் காசோலை வழங்கப்பட்டது. ஒரு மாணவருக்கு அடிப்படைக் கல்வி என்பது மிகவும் முக்கியமானது…