இந்துக்களையும் மதத்தையும் இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
கோலாலம்பூர், மார்ச் 4-இந்து மதத்தைச் சார்ந்தவர்களை குறிப்பாக ஆண்டாள், கம்பர், கம்பராமாயணத்தைத் தாக்கிப் பேசியதன் காரணமாக கவிஞர் வைரமுத்துவின் மலேசிய வருகையை இங்குள்ள இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.நேற்று தமிழ் மலரின் முதல் பக்கச் செய்தியில் மஹிமா எனப்படும் மலேசிய இந்து கோயில்களின் அமைப்புச் செயலாளர் பாலகுருநாதனின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த செய்தியை கண்ணுற்ற நாட்டில் உள்ள இந்து அமைப்புகள், தமிழ் மலரைத் தொடர்பு கொண்டு வைரமுத்து இந்த நாட்டுக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து…