மலேசியச் சுற்றுலாத்துறையின் புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமனம்
|

மலேசியச் சுற்றுலாத்துறையின் புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமனம்

(இஷாந்தினி தமிழரசன்) கோலாலம்பூர், பிப்.28-மலேசியச் சுற்றுலாத்துறை தலைமை இயக்குநராக இருந்த டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் காபார் பணிமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவிற்கான மலேசியாவின் சுற்றுலாத்துறை இயக்குநராக மூன்று தவணை காலம் மனோகரன் சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவிற்கான மலேசியாவின் சுற்றுலாத்துறை இயக்குநராக இருந்த காலகட்டத்தில், 2021ஆம் ஆண்டு இந்தியா, மும்பாயில் தேசியச் சுற்றுலா இயக்கத்தின் அலுவலகத்தையும் அவர் அமைத்துள்ளார். மேலும், ஆசிய, ஆப்பிரிக்கா வட்டாரத்திற்கான அனைத்துலக சுற்றுலா ஊக்குவிப்பிற்கான மூத்த…

மாமன்னரின் அறிவுரையை ஏற்பீர் மக்களவை மாண்பை மதிப்பீர்-ஓம்ஸ் பா.தியாகராஜன் அறிவுறுத்தல்
|

மாமன்னரின் அறிவுரையை ஏற்பீர் மக்களவை மாண்பை மதிப்பீர்-ஓம்ஸ் பா.தியாகராஜன் அறிவுறுத்தல்

கோலாலம்பூர், பிப். 28-மலேசிய அரசியலில் என்றும் காணாத அளவுக்கு மாட்சிமை தங்கிய மாமன்னரின் உரை வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக அமைந்திருப்பது போற்றுதலுக்குரியதாகும்.மாமன்னர் வழங்கிய அந்த பேருரை நாடாளுமன்ற, மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை மட்டுமல்லாது சாட்டையடியாகவும் அமைந்துள்ளதாக ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை சிறுமைப்படுத்தவும் கவிழ்க்கவும் முனைப்புக் காட்டி வந்த எதிர்க்கட்சிகளின் செயலுக்கு சம்மட்டியடியாக இருந்தது.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்கள் அரசியல் லாபத்திற்காக அவமரியாதைக்குரிய வார்த்தைகளை…

இன்றைய தலைவர்களுக்கு பேராசை, ஆணவம் வேண்டாம்! – அன்வார்
|

இன்றைய தலைவர்களுக்கு பேராசை, ஆணவம் வேண்டாம்! – அன்வார்

ஒரு காலத்தில் இந்த தேசத்தை காலனித்துவப்படுத்திய நாடுகளின் அதிகாரிகளைப் போல பேராசை மற்றும் ஆணவத்துடன் இன்றைய தலைவர்கள் இருக்க வேண்டாம் என இன்றைய தலைவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார். மலேசியாவை அனைவருக்கும் சிறந்த இடமாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் உண்மையான தலைவர்கள் இருந்தால், தற்போதைய தலைவர்கள் அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று அவர் கூறினார் நமது தேசத்திற்குச் சுதந்திரம் கிடைப்பதற்காகத் தங்கள் உயிரையும் உடமைகளையும் அடகுவைக்கத் தயாராக இருந்த கடந்த காலப் பெரிய தலைவர்களின்…

153ஆவது சட்டவிதி மறுஆய்வு செய்யப்படாது அன்வார் திட்டவட்டம்
|

153ஆவது சட்டவிதி மறுஆய்வு செய்யப்படாது அன்வார் திட்டவட்டம்

கோலாலம்பூர், பிப். 21-பூமிபுத்ராக்களுக்கு சிறப்புச் சலுகைகளை வழங்க வகை செய்யும் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் 153ஆவது விதியை அரசாங்கம் மறுஆய்வு செய்யாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.153ஆவது சட்டவிதி உள்பட ஒட்டுமொத்த கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தையே நாங்கள் தற்காப்போம். அது பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பேங்க் நெகராவில் அனைத்துலக இஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி மீதான கருத்தரங்கொன்றைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அன்வார் தெரிவித்தார். பூமிபுத்ராக்களுக்குச்…

3 இலட்சம் இந்து ஆலயங்களா? பொய்யுரைக்க வேண்டாம்
|

3 இலட்சம் இந்து ஆலயங்களா? பொய்யுரைக்க வேண்டாம்

கோலாலம்பூர், பிப். 21-இனம்-சமயம்-மொழி-பண்பாட்டுக் கூறுகளால் நல்லிணக்கத்துடன் வாழும் மலேசிய கூட்டு சமுதாயத்தில் அவ்வப்பொழுது சலசலப்பையும் பூசலையும் தோற்றுவிக்க ஒருவர் மாறி ஒருவர் என வந்துபோகின்றனர். அந்த வரிசையில் புதிதாக சேர்ந்துள்ள மத வெறுப்பு பிரசகர் முகமட் ரித்துவான் தீ, மலேசிய ஒற்றுமை சமுதாயத்தில் தீ மூட்டப் பார்க்கிறார் என்று மலேசிய இந்து சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதிலும் உள்ள இந்து வழிபாட்டு தலங்கள் குறித்த தரவும் பதிவும் எங்களிடம் ஆதாரப்பூர்வமாக உள்ள நிலையில், மூன்று லட்ச…

தாய்மொழிப் பள்ளிகள் சட்டப்பூர்வமானவை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது
|

தாய்மொழிப் பள்ளிகள் சட்டப்பூர்வமானவை கூட்டரசு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

புத்ராஜெயா, பிப். 21-தமிழ், மாண்டரினை போதனா மொழிகளாகப் பயன்படுத்தப்படுவதையும் தாய்மொழிப் பள்ளிகளின் சட்டப்பூர்வத்தன்மையையும் எதிர்த்து அரசு சார்பற்ற இரண்டு அமைப்புகள் இனியும் தங்களின் சீராய்வு மனுவைத் தொடர முடியாது என்று கூட்டரசு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.தங்களின் மேல்முறையீட்டை கூட்டரசு நீதிமன்றத்தில் தொடர அனுமதிகோரி அவ்விரு அமைப்புகளும் சமர்ப்பித்திருந்த விண்ணப்பமொன்றை டத்தோ மேரி லிம் தியாம் சுவான் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு 2-1 எனும் பெரும்பான்மையில் தள்ளுபடி செய்தது.இஸ்லாமியக் கல்வி மேம்பாட்டு மன்றம் (மாப்பிம்) மற்றும் மலேசிய…

துன் தாயிப் காலமானார்
|

துன் தாயிப் காலமானார்

சரவா மாநில முன்னாள் ஆளுநர் துன் தாயிப் மஹ்மூத் இன்று காலை கோலாலம்பூரில் மரணமடைந்தார்.கோலாலம்பூர் சிவிஎஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை 4.28 மணிக்கு காலமானார். சரவா மாநில சுற்றுலா, படைப்பாற்றல் தொழில், கலைநிகழ்ச்சிகள் அமைச்சர் டத்தோ அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்சா இதனை உறுதிப்படுத்தினார்.மேலும் சரவா மாநில சட்டமன்றத்தில் 87 வயது துன் தாயிப்பிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறினார்.

மகாதீர் சுயநினைவுடனேதான் இருக்கின்றார்
|

மகாதீர் சுயநினைவுடனேதான் இருக்கின்றார்

கோலாலம்பூர், பிப். 20 –முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது சுயநினைவுடனேதான் இருப்பதாகவும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும், அவருக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று நேற்று கூறியது. நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர், ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று, தமது பெயரை தெரிவிக்க மறுத்துவிட்ட அந்த வட்டாரம் கூறியது. ஓர் இருதய நோயாளியான மகாதீர், கிருமி தொற்றுக்குச் சிகிச்சை பெறுவதற்காக, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி கோலாலம்பூர்,…

எஃபிஐ பயங்கரவாதிகள் பட்டியலில் மூன்று மலேசியர்கள்
|

எஃபிஐ பயங்கரவாதிகள் பட்டியலில் மூன்று மலேசியர்கள்

புத்ராஜெயா, பிப். 20-அமெரிக்காவின் கூட்டரசு புலனாய்வுத்துறையின் பயங்கரவாதிகள் கண்காணிப்பு மையத்தின் பெயர்ப் பட்டியலில் மூன்று மலேசியர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இது பற்றி அந்தப் புலனாய்வு அமைப்பிடமிருந்து கூடுதல் விளக்கம் கோரப்படும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று தெரிவித்தார். அந்த மூன்று நபர்கள் பற்றிய விவரங்களை எஃபிஐ கோரியிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். ஆனால், என்ன காரணங்களால் அவர்கள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.இது குறித்து தெளிவான விளக்கம் பெறுவதற்காக இரண்டு…

உலகை அதிரவைத்த தங்கத் தாரகை ஷாமளாராணி உலக கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை
|

உலகை அதிரவைத்த தங்கத் தாரகை ஷாமளாராணி உலக கராத்தே போட்டியில் தங்கம் வென்று சாதனை

கோலாலம்பூர், பிப். 20-நாட்டின் தேசிய கராத்தே வீராங்கனை சி.ஷாமளாராணி, உலக கராத்தே போட்டியில் தங்கம் வென்று உலகையே அதிரச் செய்துள்ளார்.நேற்று முந்தினம் சைபிரஸ் லார்னாக்காவில் நடைபெற்ற உலக கராத்தே போட்டியில் 25 வயது நிரம்பிய தங்கத் தாரகை ஷாமளாராணி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவா ரோட்டிகுவெஸை 9:5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.பெண்கள் பிரிவில் 50 கிலோ கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ள ஷாமளாராணி, இதற்கு முன்னர் சீ விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை…