பௌர்ணமி அமாவாசை நிகழ்வது எப்படி
லட்சுமி சுப்ரமணியம் புவி ஞாயிறை சுற்றுகிறது, மதி (திங்கள் / நிலா / சந்திரன்) புவியைச் சுற்றுகிறது என்பதை நாம் அறிவோம். மேலும், இவை (ஏறத்தாழ) கோள வடிவானவை என்பதையும் அறிவோம்.விண்வெளியைப் பொறுத்தவரை விண்மீன்கள் தான் ஒளிக்கான மூலங்கள். ஞாயிறு மண்டலத்தின் ஒளிமூலம் ஞாயிறு மட்டுமே. பிற அனைத்து விண்மீன்களின் ஒளியும் அத்தனை செறிவு வாய்ந்தவை அல்ல (அதாவது, இங்கிருந்து பார்க்கையில்!)ஞாயிற்று ஒளி (ஒரு குறிப்பிட்ட நேரத்தில்) புவியின் ஒரு பகுதியை மட்டுமே ஒளியூட்டுகிறது. அவ்வாறே தான்…