ஜப்பானில் பலத்த நிலநடுக்கம், சுனாமிகட்டடங்கள் இடிந்து விழுந்தன
தோக்கியோ, ஜன. 2-ஜப்பானின் மத்திய பகுதியை 7.6ஆற்றல் கொண்ட பலத்த நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து அந்நாட்டின் மேற்குக் கரையோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின. ஒரு மீட்டருக்கும் உயரமான சுனாமி அலைகள் கரையோரத்தைத் தாக்கத் தொடங்கியுள்ளன. அதைவிட பெரிய அலைகள் அங்கு தாக்கலாம் என்று அரசாங்க ஒளிரப்புக் கழகமான என்எச்கே குறிப்பிட்டது,பலத்த நிலநடுக்கத்தால் இஷிகாவா மாவட்டத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.அருகில் உள்ள தலைநகர் தோக்கியோவில் கடுமையான நிலஅதிர்வுகள் ஏற்பட்டன என்றும் அதில் கட்டடங்கள் குலுங்கின என்றும்…