நடிப்பிலும் அரசியலிலும் விவேகம் காட்டிய மகத்தான மனிதர் விஜயகாந்த்!
திரைப்படத் துறையில் தனது விவேகத் திறனால், எண்ணற்ற ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு மத்தியில், முன்னேற்றம் கண்டதோடு, அரசியலிலும் தீவிரம் காட்டி முத்திரை பதித்த புரட்சிக் கலைஞர் என்று புகழாரம் சூட்டப்பட்ட, விஜயகாந்த் தனது 71 வது வயதில் மண்ணுலகிலிருந்து விடை பெற்று, விண்ணுலம் சென்று விட்டார். ஒரு திரைப்பட நடிகராக தன்னை நிலை நாட்டிக் கொண்டு, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் அரசியல் கட்சியைத் துவக்கி, ஏராளமான தொண்டர்களை தன் வசம் ஈர்ப்பதில் வெற்றி கண்டவர் விஜயகாந்த்…