ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய 80 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை!
|

ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய 80 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை!

கோலாலம்பூர், ஜன. 5 –நாட்டில் சிறு தோட்டக்காரர்களுக்குச் சொந்தமான சுமார் நான்கு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு கொண்ட ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய சுமார் 80 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். “தொழிலாளர்கள் இல்லாததால், ரப்பர் மரங்களை சீவ முடியாத நிலையில் சுமார் நான்கு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டர் ரப்பர் தோட்டங்கள் இருக்கின்றன” என்று தோட்ட மற்றும் மூலப் பொருள் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கனி தெரிவித்தார். “கணக்குப்படி பார்த்தால், ஒன்றரை…

பிடிபடுவதற்கு முன்னர் லஞ்ச ஊழலில்ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

பிடிபடுவதற்கு முன்னர் லஞ்ச ஊழலில்ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

சிரம்பான், ஜன. 5 –மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) பிடிபடுவதற்கு முன்னர், லஞ்ச ஊழலில் ஈடுபடும் எண்ணம் ஏதாவது இருந்தால் அதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு, நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தகைய ஒழுங்கீனமற்ற செயலில் அரசாங்க ஊழியர்களில் யாராவது ஈடுபட்டால், அவர்கள் மீது நேரடியாக விசாரணை நடத்த எம்ஏசிசிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக, மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண் தெரிவித்தார். “நாட்டில் நடக்கும் லஞ்ச ஊழல்…

அரசாங்கத்தைக் கவிழ்ப்பது பொறுப்பற்றதனம்

அரசாங்கத்தைக் கவிழ்ப்பது பொறுப்பற்றதனம்

சிரம்பான், ஜன. 5-குறிப்பிட்ட சில தரப்பினர் அரசாங்கத்தைக் கவிழ்க்க முயல்வது முற்றிலும் பொறுப்பற்றதனமாகும். ஆனாலும், அந்த விவகாரத்தில் தனது முழுகவனத்தையும் செலுத்தி நேரத்தை வீணடிக்க ஒற்றுமை அரசாங்கம் விரும்பவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் நேற்று தெரிவித்தார். அரசாங்கத்தைக் குறைகூறி கொண்டிருப்பவர்கள் குறிப்பாக பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்தவர்கள், “துபாய் நகர்வு”, “அலோர்ஸ்டார் நகர்வு” அல்லது “சௌக்கிட் நகர்வு”போன்ற பெயர்களில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால், அதில் கவனம் செலுத்த அரசாங்கம் விரும்பவில்லை….

டாயிம் ஸைனுடின் மீதான விசாரணை;நால்வரிடம் வாக்குமூலம் பதிவு

டாயிம் ஸைனுடின் மீதான விசாரணை;நால்வரிடம் வாக்குமூலம் பதிவு

கோலாலம்பூர், ஜன. 5-முன்னாள் நிதியமைச்சர் டாயிம் ஸைனுடினுக்கு எதிராக நடைபெற்றுவரும் விசாரணை தொடர்பில் நால்வரிடமிருந்து மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் ( எம்ஏசிசி) நேற்று வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. ஒரு சில மணிநேரத்திற்கு முன்பே வழங்கப்பட்ட அழைப்பாணையை ஏற்று அந்நால்வரும் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு விசாரணைக்காக வந்திருந்தனர். ஆயினும், அவர்களோடு தத்தம் வழக்கறிஞர்கள் உடன்வர முடியாது என்று எம்ஏசிசி அதிகாரிகள் தடை விதித்தனர். இதற்கு அந்த வழக்கறிஞர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். விசாரணை அறைக்குள் நுழைய…

ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க மேற்கொள்ளப்படும் எந்த நகர்வும் நடக்காது
|

ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க மேற்கொள்ளப்படும் எந்த நகர்வும் நடக்காது

பெட்டாலிங் ஜெயா, ஜன. 5-நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் எந்தவொரு நகர்வும் ஒரு போதும் நடக்காது என பிரதமர் இலாகா துணை அமைச்சர் (சட்டம் மற்றும் துறை சார் சீர்திருத்தம்) எம். குலசேகரன் கூறினார்.தற்போது நடப்பு அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் துபாய் நகர்வு சதித் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக வதந்திகள் பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மிக வலிமையுடன் இருப்பதை எதிர்க்கட்சித் தலைவர்கள்…

மாணவி ஷிவானி குடும்பத்தைச் சந்தித்த கல்வி அமைச்சு
|

மாணவி ஷிவானி குடும்பத்தைச் சந்தித்த கல்வி அமைச்சு

குடியுரிமை ஆவணம் இல்லாத காரணத்தால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போன மாணவி ஷிவானியின் விவகாரம் தொடர்பில் கல்வியமைச்சு மாணவி ஷிவானியின் குடும்பத்தினருடன் சந்திப்பு நடத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் நெகிரி செம்பிலான் மாநில கல்வி இலாகா மாணவரின் பதிவு, நிர்வகிப்பு தொடர்பாக முழுமையான பணிகளை மேற்கொள்ளும் என்று கல்வி அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது. பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத சூழல் காரணமாக இந்த விவகாரத்தில் தமக்கு உதவுமாறு மாணவி ஷிவானி பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு…

“ அன்வாரின் மகள் பெனாசிருக்கு இணையானவர்”நூருல் இஸ்ஸா தலைமையில் அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டும்
|

“ அன்வாரின் மகள் பெனாசிருக்கு இணையானவர்”நூருல் இஸ்ஸா தலைமையில் அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜன. 3-பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாரை பெனாசிர் பூட்டோ மற்றும் மேகாவதி சுகர்னோபுத்ரி ஆகியோரோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கும் அக்கட்சியின் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம், வரும் பதினாறாவது பொதுத்தேர்தலை நூருல் இஸ்ஸா தலைமையில் பிகேஆர் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமரும் பிகேஆர் தலைவருமான அன்வாரின் புதல்வி நூருல் இஸ்ஸா, ஆற்றலும் அனுபவமும் ஒருங்கே அமைந்தவர் என்று குறிப்பிட்டார்.நூருல் இஸ்ஸா மக்களை வசீகரிக்கக்கூடியவர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர்…

ஈப்போவில் திருப்புகழ் சபை நிறுவ உதவிகள் வழங்கப்படும்

ஈப்போவில் திருப்புகழ் சபை நிறுவ உதவிகள் வழங்கப்படும்

ஆர்.கிருஷ்ணன் ஈப்போ, ஜன. 3-அண்மையில் நடந்து முடிந்த தமிழராய்ச்சி மாநாட்டில் ஒரு பிரமுகர் இந்து சனாதனம் பற்றி இழிவாக மதிப்பீடு செய்தபோது குறுக்கிட்டு பேச நினைத்தபோது நான் கூற வந்த கருத்தை மறந்துவிட்டு வேறு விசயம் குறித்து பேசி விட்டேன். நான் கூற வந்த கருத்தை இப்பொழுது கூறவுள்ளேன். இவ்வுலகில் பக்தி இலக்கியம்தான் தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டு செய்துள்ளதை அனைவரும் உணருதல் அவசியம் என்று மலேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இங்கு நடைபெற்ற அருணகிரிநாதர்…

வாகனமோட்டும் உரிமம், சாலை வரியைமைஜேபிஜே செயலி மூலம் இனி புத்துப்பிக்கலாம்

வாகனமோட்டும் உரிமம், சாலை வரியைமைஜேபிஜே செயலி மூலம் இனி புத்துப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜன. 3 –வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல், மலேசியர்கள் தங்களின் வாகனமோட்டும் உரிமத்தையும் (லைசென்ஸ்) சாலை வரியையும் மைஜேபிஜே (ஆலதுஞது) செயலி மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம். இப்புதிய சேவை மூலம் பொதுமக்களின் நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்த முடியும் என்பதுடன் சாலைப் போக்குவரத்து இலாகா முகப்பிடங்களில் காத்திருக்கும் நேரத்தையும் குறைக்க முடியும் என்று, போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்தார். செயலி மூலம் வாகனமோட்டும் உரிமத்தையும் சாலை வரியையும் புதுப்பித்துக் கொள்ளும் இந்த…

“துபாய் நகர்வு” அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
|

“துபாய் நகர்வு” அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

புத்ராஜெயா, ஜன. 3 –ஐக்கிய அரபு சிற்றரசில் மேற்கொள்ளப்பட்டதாக பரவலாகக் கூறப்பட்டு வரும், ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்திலான “துபாய் நகர்வு” திட்டம், அரசாங்கத்திற்குத் தாக்கத்தை ஏர்படுத்தவில்லை என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கின்றார். அந்த “துபாய் நகர்வு” திட்டம் தொடர்பிலான சந்திப்புக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சில அரசாங்கப் பிரதிதிகளுக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. “துபாய் நகர்வு” ஒற்றுமை அரசாங்கம் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் நாட்டை மேம்படுத்துவதிலும் மக்களை கவனித்துக் கொள்வதிலுமே…