நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலய சீரமைப்புக்கு உதவிகள் வழங்கப்படும்
|

நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலய சீரமைப்புக்கு உதவிகள் வழங்கப்படும்

( தி.ஆர்.மெத்தியூஸ்) நிபோங் தெபால், ஜன. 2-தென் செபராங் பிறை, நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலயத்தின் சீரமைப்புத் தேவைகளுக்கு,ஆலய நிர்வாகம் முறையாக விண்ணப்பம் செய்தால் அதற்கான உதவிகளை செய்துக் கொடுக்க தயாராக இருப்பதாக நிபோங் தெபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பட்லினா சிடேக் கூறினார்.நேற்று முன்தினம் தேவாலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த அவர், தேவாலயத்தின் கூரைகளில் ஏற்பட்டுள்ள பழுது, அருகிலுள்ள கல்லறை, திடலுக்கு தேவையான மண் போன்ற பிரச்சனைகள் குறித்து பங்கு குருவானர் அருள்நாதன் ஜோசப்,…

பிரிக்பீல்ட்ஸில் 174 இந்தியப் பிரஜைகள் உட்பட அந்நிய நாட்டவர்கள் கைது
|

பிரிக்பீல்ட்ஸில் 174 இந்தியப் பிரஜைகள் உட்பட அந்நிய நாட்டவர்கள் கைது

கோலாலம்பூர், ஜன. 2-தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் நேற்று புத்தாண்டு அன்று குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட கள்ளக் குடியேறிகள் தடுத்து வைக்கப்பட்டனர். ஜாலான் தம்பி அப்துல்லாவில் உள்ள 30 இடங்களில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட சோதனையில் 224 அதிகாரிகளும் பல்வேறு ஏஜென்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.நேற்று மதியம் 1.00 மணியளவில் ஓப்ராசி சாபு எனும் பெயரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறை நடவடிக்கைப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர்…

ஒருமைப்பாட்டுடைய சமுதாயமாக திகழ்வோம்
|

ஒருமைப்பாட்டுடைய சமுதாயமாக திகழ்வோம்

கோலாலம்பூர், ஜன.1-மலேசிய சமுதாயம் ஒருமைப்பாட்டுடைய சமுதாயமாக திகழ வேண்டும். மேன்மைக்குரிய சமுதாயமாகவும் விளங்க வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்தச் சமுதாயத்தின் பங்களிப்பு என்பது இன்றியமையாததாகும்.பிறந்துள்ள புத்தாண்டு நாட்டு மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு நன்மை தரும் ஆண்டாக இருக்கும் என்று தாம் நம்புவதாக ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு முழுவதும் நாம் சாதித்தவற்றையும் சாதிக்காதவற்றையும் ஒருமுறை நினைத்து பார்த்து புதிய ஆண்டில் புதிய சிந்தனையோடு நாம் காரியங்கள்…

வெற்றி நிச்சயமென புத்தாண்டை வரவேற்போம்
|

வெற்றி நிச்சயமென புத்தாண்டை வரவேற்போம்

கோலாலம்பூர், ஜன.1-வெற்றி நிச்சயம் என்னும் கருப்பொருளோடு 2024 புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். இன்று மலர்ந்த புத்தாண்டில், நம் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து இனிதே இந்த ஆண்டை வரவேற்போம். நாம் கடந்து வந்த பாதையின் அனுபவத்தைக் கொண்டு, புதிய ஆண்டை வரவேற்போம். புதிய வெளிச்சத்தை பாய்ச்சுவோம். 2024ஆம் ஆண்டு நாம் எதிர்பார்த்ததைப் போலவே…

பேரரசர் தம்பதியரின் புத்தாண்டு வாழ்த்து
|

பேரரசர் தம்பதியரின் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், ஜன. 1-மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா அமாட் ஷாவும் அவரின் துணைவியார் பேரரசி ராஜா பெர்மைசூரி துங்கு அஸிஸா அமினா மைமூனா இஸ்கண்டாரியாவும் மலேசியர்கள் அனைவருக்கும் தங்களின் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.இன்று பிறந்துள்ள 2024 புத்தாண்டில் நாடும் மக்களும் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்று தாங்கள் பிரார்த்திப்பதாகவும் பேரரசர் தம்பதியர் குறிப்பிட்டுள்ளனர்.நாட்டில் தொடர்ந்து ஒற்றுமையும் நல்லிணக்கமும் நீடித்துவர வேண்டுமென்று தாங்கள் வேண்டிக் கொள்வதாகவும் இஸ்தானா நெகாராவின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட…

புத்தாண்டே வருக… புது பொலிவை தருக…
|

புத்தாண்டே வருக… புது பொலிவை தருக…

புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரினை வேரோடு சாய்ப்போம் என்று வைர வரிகளோடு இருகரம் கூப்பி 2024 புத்தாண்டை வரவேற்கின்றனர் மலாயாப் பல்கலைக்கழக இந்திய மாணவர்கள். இந்தப் புத்தாண்டு புதியதோர் எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் ஒற்றுமை உணர்வையும் மேலோங்க செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களான சர்வேந்திரன் சந்தர், ரினிஷா விஜயகுமார், சக்தி மூர்த்தி, லாவண்யா ரவிச்சந்திரன், ஹரிணி கருணாகரன், ஹரி கண்ணன், நளன் குணாளன், தீபன் தினகரன், சுவர்ணா விமலெசன், லோகனபிரியா சிவக்குமார், கஜலெட்சுமி சரவணன், சித்ரா…

நடிப்பிலும் அரசியலிலும் விவேகம் காட்டிய மகத்தான மனிதர் விஜயகாந்த்!
|

நடிப்பிலும் அரசியலிலும் விவேகம் காட்டிய மகத்தான மனிதர் விஜயகாந்த்!

திரைப்படத் துறையில் தனது விவேகத் திறனால், எண்ணற்ற ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு மத்தியில், முன்னேற்றம் கண்டதோடு, அரசியலிலும் தீவிரம் காட்டி முத்திரை பதித்த புரட்சிக் கலைஞர் என்று புகழாரம் சூட்டப்பட்ட, விஜயகாந்த் தனது  71 வது வயதில் மண்ணுலகிலிருந்து விடை பெற்று, விண்ணுலம் சென்று விட்டார்.   ஒரு திரைப்பட நடிகராக தன்னை நிலை நாட்டிக் கொண்டு, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் அரசியல் கட்சியைத் துவக்கி, ஏராளமான தொண்டர்களை தன் வசம் ஈர்ப்பதில் வெற்றி கண்டவர் விஜயகாந்த்…

கொடுத்த வாக்குறுதிபடி பிரதமரின் ஒவ்வொரு திட்டமும் நாட்டுக்காக மக்களுக்காக மிளிர்கிறது
|

கொடுத்த வாக்குறுதிபடி பிரதமரின் ஒவ்வொரு திட்டமும் நாட்டுக்காக மக்களுக்காக மிளிர்கிறது

மித்ரா அமைப்பு தற்போது தேசிய ஒற்றுமை துறை அமைச்சின் வழி செயல்பட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அங்கீகரம் வழங்கினாலும் அதன் செயல்பாடுகள் மீது நிதி அமைச்சு சார்பில் தமது பார்வை தொடர்ந்து இருக்கும் என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.