அரசு ஊழியர்களின் சம்பள மறுஆய்வு;அக்டோபரில் அறிவிக்கப்படும்
கோலாலம்பூர், ஏப். 4-வரும் அக்டோபர் மாதம் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் வேளையில், அரசு சேவைத்துறைக்கான புதிய சம்பளத் திட்டம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.புதிய சம்பளத் திட்டம் மீதான பொதுச்சேவை ஊதியமுறை ஆய்வு (எஸ்எஸ்பிஏ) இறுதிக் கட்டத்தில் உள்ளது. மேல்பரிசீலனைக்காக அமைச்சரவையிடம் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று பிரதமர்துறை அமைச்சர் ( கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஜலீஹா முஸ்தாபா கூறினார்.அரசு ஊழியர்களின் சம்பள மறுஆய்வு மீது அரசாங்கம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. எஸ்எஸ்பிஏ திட்டத்தை…