கேப்டனுக்கு மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் R.யுனேஸ்வரன் நேரில் இரங்கல்
அண்மையில் உடல் நலக் குறைவால் காலமான நடிகரும், தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத் தலைவருமான கேப்டன் விஜயாகாந்த்துக்கு மலேசியாவில் துடிப்புமிக்க இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு R.யுனேஸ்வரன் நேரில் அஞ்சலி செலுத்தினார். இன்று கேப்டனின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியது மட்டுமின்றி, அவரின் வீட்டுக்கும் சென்று திருமதி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் விஜய் பிரபாகரனைச் சந்தித்து, மலேசிய மக்கள் நீதி கட்சியான PKR சார்பாகவும், மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் சார்பாகவும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத்…