போலீஸ் அதிகாரியாவதே எனது லட்சியம்
சிரம்பான், ஜன. 8-எதிர்காலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றுவதே தனது லட்சியம் என்று பத்து வயதான ஆர்.ஷிவானி தெரிவித்துள்ளார். கணிதம்தான் தனக்கு பிடித்த பாடம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குடிரிமைப் பிரச்சினை காரணமாக ஷிவானியால் கடந்தாண்டு பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனது. இதனைத் தொடர்ந்து, பள்ளிப் படிப்பைத் தொடர்வதற்கு உதவக் கோரி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அன்மையில் அச்சிறுமி கடிதமொன்றை அனுப்பியிருந்தார். ஷிவானி எதிர்நோக்கிவரும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக தேசிய பதிவுத்துறை வாயிலாக கல்வியமைச்சு மேற்கொண்ட முயற்சியினால்…