“ அன்வாரின் மகள் பெனாசிருக்கு இணையானவர்”நூருல் இஸ்ஸா தலைமையில் அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டும்
|

“ அன்வாரின் மகள் பெனாசிருக்கு இணையானவர்”நூருல் இஸ்ஸா தலைமையில் அடுத்த பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டும்

கோலாலம்பூர், ஜன. 3-பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாரை பெனாசிர் பூட்டோ மற்றும் மேகாவதி சுகர்னோபுத்ரி ஆகியோரோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கும் அக்கட்சியின் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம், வரும் பதினாறாவது பொதுத்தேர்தலை நூருல் இஸ்ஸா தலைமையில் பிகேஆர் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமரும் பிகேஆர் தலைவருமான அன்வாரின் புதல்வி நூருல் இஸ்ஸா, ஆற்றலும் அனுபவமும் ஒருங்கே அமைந்தவர் என்று குறிப்பிட்டார்.நூருல் இஸ்ஸா மக்களை வசீகரிக்கக்கூடியவர். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர்…

ஆட்டத்தை மாற்றப் போகும் GAME CHANGER
|

ஆட்டத்தை மாற்றப் போகும் GAME CHANGER

புத்ராஜெயாவில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘சென்ட்ரல் டேட்டாபேஸ் ஹப்’ எனப்படும் மத்திய தரவுத்தளமான பாடு (PADU) , உதவி மற்றும் மானியங்களின் விநியோகம் திறம்பட மற்றும் அவர்களின் இலக்கு குழுக்களை சென்றடைவதை மட்டும் உறுதி செய்யாது, இது அரசாங்கத்தின் தகவல் கசிவுகளைத் தடுக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், பாடுவை வைத்து, தகுதியில்லாதவர்கள் – 3.5 மில்லியன் வெளிநாட்டினர், செல்வந்தர்கள் மற்றும் உயர் வருமானம் உள்ளவர்களை அடையாளம் காண முடியும் என்பதால், அவர்கள் உதவிகளைப் பெற முடியாது என்று…

“துபாய் நகர்வு” அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
|

“துபாய் நகர்வு” அரசாங்கத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

புத்ராஜெயா, ஜன. 3 –ஐக்கிய அரபு சிற்றரசில் மேற்கொள்ளப்பட்டதாக பரவலாகக் கூறப்பட்டு வரும், ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்திலான “துபாய் நகர்வு” திட்டம், அரசாங்கத்திற்குத் தாக்கத்தை ஏர்படுத்தவில்லை என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கின்றார். அந்த “துபாய் நகர்வு” திட்டம் தொடர்பிலான சந்திப்புக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சில அரசாங்கப் பிரதிதிகளுக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. “துபாய் நகர்வு” ஒற்றுமை அரசாங்கம் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் நாட்டை மேம்படுத்துவதிலும் மக்களை கவனித்துக் கொள்வதிலுமே…

‘துபாய் நகர்வு’ – அது முன்கூட்டியே எனக்குத் தெரியும்! – ஜாஹிட் ஹமிடி
|

‘துபாய் நகர்வு’ – அது முன்கூட்டியே எனக்குத் தெரியும்! – ஜாஹிட் ஹமிடி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சம்பந்தப்பட்ட நபர்கள் தரையிறங்குவதற்கு முன்பே “துபாய் நகர்வு” பற்றி தனக்குத் தெரியும் என்று துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சிலர் அங்கு சென்ற தருணத்தில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சில அரசாங்கப் பிரதிநிதிகளின் அண்மைய ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பயணம் துபாய் நகர்வு பற்றிய ஊகங்களை எழுப்பின….

நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலய சீரமைப்புக்கு உதவிகள் வழங்கப்படும்
|

நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலய சீரமைப்புக்கு உதவிகள் வழங்கப்படும்

( தி.ஆர்.மெத்தியூஸ்) நிபோங் தெபால், ஜன. 2-தென் செபராங் பிறை, நிபோங் தெபால் புனித அந்தோணியார் தேவாலயத்தின் சீரமைப்புத் தேவைகளுக்கு,ஆலய நிர்வாகம் முறையாக விண்ணப்பம் செய்தால் அதற்கான உதவிகளை செய்துக் கொடுக்க தயாராக இருப்பதாக நிபோங் தெபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பட்லினா சிடேக் கூறினார்.நேற்று முன்தினம் தேவாலயத்திற்கு சிறப்பு வருகை புரிந்த அவர், தேவாலயத்தின் கூரைகளில் ஏற்பட்டுள்ள பழுது, அருகிலுள்ள கல்லறை, திடலுக்கு தேவையான மண் போன்ற பிரச்சனைகள் குறித்து பங்கு குருவானர் அருள்நாதன் ஜோசப்,…

ஜப்பான் நிலநடுக்கம் – அரசாங்கம் நிலைமையைக் கண்காணிக்கிறது! – அன்வார்
|

ஜப்பான் நிலநடுக்கம் – அரசாங்கம் நிலைமையைக் கண்காணிக்கிறது! – அன்வார்

ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இஷிகாவா பகுதியில் உள்ள மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் தங்கள் ஆறுதலைத் தெரிவித்தனர். வெளியுறவு அமைச்சு மற்றும் ஜப்பானில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து வருவதாக அன்வார் தமது முக நூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடினமான மற்றும் சவாலான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிமையும் பொறுமையும் அமையட்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக,…

மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழக கட்டட நிதிக்கு வெள்ளி 1 லட்சம் நன்கொடை வழங்கினார் ஓம்ஸ் பா.தியாகராஜன்
|

மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழக கட்டட நிதிக்கு வெள்ளி 1 லட்சம் நன்கொடை வழங்கினார் ஓம்ஸ் பா.தியாகராஜன்

சிலாண்டார், ஜன. 1-கடந்த சனிக்கிழமை சிலாண்டார், டேவாண் ஹாங் கஸ்தூரி மண்டபத்தில் மலாக்கா மாநில சிலம்பப் போர்க்கலைக் கழகம் ஏற்பாட்டில் போர்க்கலையின் வளர்ச்சி நிதிக்கான விருந்தோம்பல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்வாழ்த்து, போர்க்கலை பாடல், இறைவாழ்த்து பாடலுக்கு பிறகு நடனமணியின் நடனம் நடைபெற்றது. தொடர்ந்து ஏற்பாட்டுக்குழு செயலாளர் வரவேற்புரையாற்றினார்.தொடர்ந்து நிகழ்வில் அதி மஹா ருத்ரவீரன் கிரண்ட் மாஸ்டர் என். முரளிதரன் சிறப்புரையாற்றினார். நிகழ்வுக்குச் சிறப்பு வருகை புரிந்த ஓம்ஸ் அறவாரியத் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் சிறப்புரையாற்றினார்….

முன்னாள் பிரதமர் – இரண்டு தனி செயலாளர்களுக்கு எம்.ஏ.சி.சி சம்மன்
|

முன்னாள் பிரதமர் – இரண்டு தனி செயலாளர்களுக்கு எம்.ஏ.சி.சி சம்மன்

கோலாலம்பூர், ஜன. 2-மில்லியன் கணக்கான பண மோசடி தொடர்பாக விசாரணைக்கு உதவும் பொருட்டு முன்னாள் பிரதமருக்கும் அவரின் இரண்டு தனி செயலாளர்களுக்கும் எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்த வாரம் சம்மங்களை அனுப்பும் என்று அது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர், ஒரு நாடளுமன்ற உறுப்பினர் இருவரும் அந்த அறவாரியத்தின் புரவலர்கள் என்று இணையத்தளம் ஒன்றில் தெரிவித்துள்ளது.அவரும் அவரின் மனைவி, குழந்தைகள் ஆகியோர் சொத்துக் குவித்துள்ள சந்தேகம் காரணமாக எம்.ஏ.சி.சி விசாரணை…

ஜப்பானில் பலத்த நிலநடுக்கம், சுனாமிகட்டடங்கள் இடிந்து விழுந்தன
|

ஜப்பானில் பலத்த நிலநடுக்கம், சுனாமிகட்டடங்கள் இடிந்து விழுந்தன

தோக்கியோ, ஜன. 2-ஜப்பானின் மத்திய பகுதியை 7.6ஆற்றல் கொண்ட பலத்த நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து அந்நாட்டின் மேற்குக் கரையோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தாக்கின. ஒரு மீட்டருக்கும் உயரமான சுனாமி அலைகள் கரையோரத்தைத் தாக்கத் தொடங்கியுள்ளன. அதைவிட பெரிய அலைகள் அங்கு தாக்கலாம் என்று அரசாங்க ஒளிரப்புக் கழகமான என்எச்கே குறிப்பிட்டது,பலத்த நிலநடுக்கத்தால் இஷிகாவா மாவட்டத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன.அருகில் உள்ள தலைநகர் தோக்கியோவில் கடுமையான நிலஅதிர்வுகள் ஏற்பட்டன என்றும் அதில் கட்டடங்கள் குலுங்கின என்றும்…