இந்தியர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டுவரும் திட்டங்கள் மீது மித்ரா தனிக் கவனம் செலுத்தும்
|

இந்தியர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டுவரும் திட்டங்கள் மீது மித்ரா தனிக் கவனம் செலுத்தும்

புத்ராஜெயா, மார்ச் 21-இந்திய சமூகத்திற்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் மீது மித்ராவின் ( மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு ) செயல்திட்ட பயிலரங்கு தனிக் கவனம் செலுத்தும் என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் ஏரன் அகோ டாகாங் நேற்று தெரிவித்தார். “மித்ரா முகமை என்னுடைய அமைச்சின்கீழ் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது. மித்ரா செயல்பாட்டு இலக்கின் மீது மீண்டும் கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.கடந்த 2021ஆம் ஆண்டின் இந்திய சமூக நடவடிக்கைத் திட்டத்தில் (பிடிஎம்ஐ)…

பேராவில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஆண்டு தோறும் ரிம10 மில்லியன் நிதி உதவி
|

பேராவில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு ஆண்டு தோறும் ரிம10 மில்லியன் நிதி உதவி

டிகே.மூர்த்தி தெலுக் இந்தான், மார்ச் 20-மக்களுக்காக வழங்கப்படும் அரசாங்க நிதி உதவித் திட்டத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணியில் மோசடி நடந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக என்னிடமோ அல்லது ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனிடமோ புகார் வழங்கினால் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம் என பாசிர் பெர்டாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ காஹ் லியோங் தெரிவித்தார். நேற்று 19.3.2024 இல் தெலுக் இந்தான் நாடாளுமன்றம் ஜாலான் லக்ஸமணாவில் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோயில் புதியக்கட்டடத் திருப்பணிக்கு அமைச்சர் ஙா கோர் மிங்…

இந்தியர்களுக்கு 2,500 மெட்ரிகுலேஷன்இடங்களை ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு செனட்டர் சிவராஜ் வலியுறுத்தல்
|

இந்தியர்களுக்கு 2,500 மெட்ரிகுலேஷன்இடங்களை ஒதுக்க வேண்டும் பிரதமருக்கு செனட்டர் சிவராஜ் வலியுறுத்தல்

கோலாலம்பூர், மார்ச் 20-இந்தியர்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்தும் தமது கடப்பாட்டை நிரூபிக்க இந்திய சமூகத்திற்கு 2,500 மெட்ரிகுலேஷன் இடங்களை ஒதுக்கும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை அரசாங்க மேலவை உறுப்பினர் சி.சிவராஜ் வலியுறுத்தியுள்ளார். இதனால், மலாய்க்காரர்களின் ஆதரவை இழக்க வேண்டிவரும் என்று அன்வார் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்திய சமூகம் மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பதும் இதுபோன்ற உதவி அச்சமூகத்திற்குத் தேவைப்படுகிறது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றாகும் என்றும் சிவராஜ் சுட்டிக் காட்டினார்.பிரதமர் எனும் வகையில் அனைத்து இனங்களையும்…

“தேனிலவு முடியப் போகிறது; இனிமேல்தான் என்னுடைய ஆட்சி தொடங்கும்”
|

“தேனிலவு முடியப் போகிறது; இனிமேல்தான் என்னுடைய ஆட்சி தொடங்கும்”

கோலாலம்பூர், மார்ச் 20-பேரரசர் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழிந்து விட்டன. இனிமேல்தான், என்னுடைய அசல் பாணியிலான ஆட்சி தொடங்கப் போகிறது என்று மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நேற்று அறிவித்தார்.தேனிலவு கிட்டத்தட்ட முடிவடையும் தறுவாயில் உள்ளது. பேரரசர் பொறுப்புக்கு வந்த இரண்டு மாதங்கள் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாள்களே எஞ்சியுள்ளன. தேனிலவுக் காலம் முடிவடைந்தவுடன் நாட்டுத் தலைவர் எனும் வகையில் அசல் பாணியிலான எனது கண்காணிப்புப் பணியை மேற்கொள்வேன் என்றார்…

இந்துக்களையும் மதத்தையும் இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
|

இந்துக்களையும் மதத்தையும் இழிவுபடுத்திய வைரமுத்துவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

கோலாலம்பூர், மார்ச் 4-இந்து மதத்தைச் சார்ந்தவர்களை குறிப்பாக ஆண்டாள், கம்பர், கம்பராமாயணத்தைத் தாக்கிப் பேசியதன் காரணமாக கவிஞர் வைரமுத்துவின் மலேசிய வருகையை இங்குள்ள இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.நேற்று தமிழ் மலரின் முதல் பக்கச் செய்தியில் மஹிமா எனப்படும் மலேசிய இந்து கோயில்களின் அமைப்புச் செயலாளர் பாலகுருநாதனின் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த செய்தியை கண்ணுற்ற நாட்டில் உள்ள இந்து அமைப்புகள், தமிழ் மலரைத் தொடர்பு கொண்டு வைரமுத்து இந்த நாட்டுக்கு வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து…

2024ஆம் ஆண்டின் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாநாடு
|

2024ஆம் ஆண்டின் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாநாடு

இஷாந்தினி தமிழரசன்லாவண்யா ரவிச்சந்திரன் கோலாலம்பூர், மார்ச்.1-2023 ஆம் ஆண்டில் பொருளாதார சவால்களும் அதிக பணவீக்கமும் இருந்தாலும், எதிர்பார்ப்புகளை மீறிய நிலையில் மலேசியாவின் பொருளாதாரம் 329.5 பில்லியன் உயர்வை அடைந்துள்ளது என்று நேற்று நடைபெற்ற 2024ஆம் ஆண்டின் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாநாட்டில் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் செனட்டர் தெங்கு டத்தோஸ்ரீ உத்தாமா ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் கூறினார். உற்பத்தி, சேவை, முதன்மைத் துறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலீடுகளால் நாட்டின் பொருளாதாரம் செழித்தோங்குவதோடு மட்டுமின்றி,…

ஒற்றுமைத்துறை அமைச்சின் மக்கள் மத்தியஸ்தர்களாக ஐந்து இந்தியர்கள் நியமனம்
|

ஒற்றுமைத்துறை அமைச்சின் மக்கள் மத்தியஸ்தர்களாக ஐந்து இந்தியர்கள் நியமனம்

பினாங்கு, மார்ச் 1 –மக்களிடையே நிலவும் பிரச்சனைகளுக்கு நடுநிலையாக இருந்து,தீர்வு காணும் பிரதிநிதிகளாக தேசிய ஒற்றுமைத் துறையில் கீழ் மக்களின் மத்தியஸ்தர்களாக 5 இந்தியர்கள் நியமிக்கப்பட்டனர்.காளிதாஸ் இராமசாமி,எம்.பத்மநாதன்,கே.முனியாண்டி,கே.முருகேஸ்வரன் மற்றும் எல்.பாலு ஆகியோராவர். அண்மையில் தலைநகரில் நடைபெற்ற நிகழ்வில்,தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் மற்றும் துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோரிடமிருந்து அதற்கான நியமனச் சான்றிதழ்களை இவர்கள் பெற்றுக்கொண்டனர். மக்கள் மத்தியில் நிலவும் எந்தவொரு தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கும் மத்தியஸ்தர்களாக இருந்து தீர்த்து வைக்கும் கடமையும்…

ஊழல் செய்யும் நபர்களை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவேன்
|

ஊழல் செய்யும் நபர்களை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவேன்

கோலாலம்பூர், மார்ச் 1-அமைச்சரவையில் இடம்பெறுள்ள எவரும் லஞ்சஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தால், அவரின் பதவி பறிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று எச்சரித்தார்.நாட்டை ஊழலிலிருந்து மீட்பதற்கு தாம் இவ்வாறு செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர் சொன்னார். லஞ்சஊழல் நடவடிக்கைகளில் அமைச்சர்கள் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்படி மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) உத்தரவிட்டுள்ளேன் என்றும் அன்வார் கூறினார்.ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். பிரதமரோ அமைச்சர்களோ ஊழலில்…

தமிழ் மலர் செய்தி எதிரொலி
|

தமிழ் மலர் செய்தி எதிரொலி

கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்புகள் தொடரும் லாவண்யா ரவிச்சந்திரன்கிள்ளான், மார்ச்.1-கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கணினி வகுப்புகள் திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பெற்றோர்கள் சிறப்புக் குழு அமைத்து இப்பிரச்சினையைத் தீர்க்க முடிவெடுத்தனர். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று முன் தினம் நடைபெற்ற வேளையில், இது குறித்து தமிழ்மலர் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் இதன் எதிரொலியாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் அப்பள்ளியில் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த்…

சமூக ஊடகத் தள நிறுவனங்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்வதில்லை
|

சமூக ஊடகத் தள நிறுவனங்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை ஏற்றுக் கொள்வதில்லை

கோலாலம்பூர், பிப். 29-சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு சமூக ஊடகத் தள வழங்குநர்கள் தங்களின் சுய மதிப்பீட்டை பயன்படுத்துகின்றனர். இதில், சம்பந்தப்பட உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு அரசாங்கத்திடமிருந்து வரும் எந்த அறிவுறுத்தல்களையும் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று தொடர்பு, பல்லூடகத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.நடப்பில், சமூக ஊடகங்களில் இருக்கும் உள்ளடக்கம் தொடர்பான அறிக்கைகளை மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) முகநூல், டிக்டோக், எக்ஸ் போன்ற சமூகத் ஊடகத் தள வழங்குநர்களிடம் அதன்…