ஆஸ்ட்ரோ பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட உள்ளூர், அனைத்துலக முதல் ஒளிபரப்புகளுடன் பொங்கலை வரவேற்கிறது

ஆஸ்ட்ரோ பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட உள்ளூர், அனைத்துலக முதல் ஒளிபரப்புகளுடன் பொங்கலை வரவேற்கிறது

கோலாலம்பூர், ஜன. 12 – பலரின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பொங்கல் பிடித்துள்ளது என்றால் அது மிகையாகாது. புத்தாண்டின் தொடக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும் இது டிவி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் எங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் பலவிதமான உள்ளூர் மற்றும் சர்வதேசப் பொங்கல் முதல் ஒளிபரப்புகளுடன் இந்த பண்டிகையை ஆஸ்ட்ரோ வரவேற்கிறது. ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “குடும்பங்களோடு ஒன்றுபடுவதற்கான ஒரு…

நெருங்கி வரும் பொங்கல் விலை உயரும் காய்கறிகள்

நெருங்கி வரும் பொங்கல் விலை உயரும் காய்கறிகள்

(டிகே.மூர்த்தி) தெலுக் இந்தான், ஜன. 12-இன்னும் ஓரிரு நாள்களில் பொங்கல் பண்டிகை மலேசியத் தமிழர்களால் கொண்டாடப்படும் வேளையில், காய்கறி மற்றும் பொங்கலுக்கு பயன்படுத்தும் வெத்தலை வள்ளிக் கிழங்கு, சிறு கிழங்கு மற்றும் கருணைக் கிழங்கு வகைகள் கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் கிலோவுக்கு சராசரி ரிம5.00 அதிகரித்துள்ளது என தெலுக் இந்தான் பெரிய சந்தையில் உள்ள காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர். இங்குள்ள வணிக மையங்களில் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது என்றாலும், காய்கறி மற்றும் இந்தியாவின் பெரிய…

கால்பந்து சங்கத்தில் வெ. 60 லட்சம் ஊழல்:சனுசியிடம் 3 மணிநேரம் விசாரணை

கால்பந்து சங்கத்தில் வெ. 60 லட்சம் ஊழல்:சனுசியிடம் 3 மணிநேரம் விசாரணை

புத்ராஜெயா, ஜன. 12-கெடா கால்பந்து சங்கத்தில் நிகழ்ந்துள்ள அறுபது லட்சம் வெள்ளி ஊழல் தொடர்பில் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோரிடம் புத்ராஜெயாவில் உள்ள மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையத்தின் ( எம்ஏசிசி) தலைமையகத்தில் நேற்று கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. சனுசியை ஏற்றியிருந்த வெள்ளி நிற (சில்வர்) மெர்சிடிஸ் கார் நேற்று முற்பகல் 11.37 மணியளவில் எம்ஏசிசி தலைமைகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.கார் நிற்காமல் சென்றதால் அவரிடமிருந்து விளக்கம் கோருவதற்கு செய்தியாளர்கள்…

நாட்டில் 5 லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனரா?ஆதாரத்தைக் காட்டுங்கள்
|

நாட்டில் 5 லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனரா?ஆதாரத்தைக் காட்டுங்கள்

கோலாலம்பூர், ஜன. 12 –நாட்டில் வேலையில்லாத ஐந்து லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறுவோர், அதற்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என்று, மனித வளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் கோரியுள்ளார். சட்டப்பூர்வமாக வேலையில் அமர்த்தப்படாத ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அந்நியத் தொழிலாளர்கள் மலேசியாவில் இருப்பதாக, மலேசிய தனியார் தொழிலாளர் நிறுவனங்களின் தேசிய சங்கத்தின் தலைமைச் செயலாளர் சுகுமாரன் நாயர் கூறியதாக கடந்த திங்கட்கிழமை பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் தொடர்பில் தகவல்களைப் பெற்றால், தமது அமைச்சு…

ஆர்டிஎஸ் லிங்க் ரயில்பாதை இணைப்பு அன்வார், லீ தொடக்கி வைத்தனர்
|

ஆர்டிஎஸ் லிங்க் ரயில்பாதை இணைப்பு அன்வார், லீ தொடக்கி வைத்தனர்

ஜொகூர்பாரு, ஜன. 12-ஜொகூர்பாரு- சிங்கப்பூர் துரித ரயில்பாதைத் திட்டத்தின் (ஆர்டிஎஸ் லிங்க்) ஒரு பகுதியான பால இணைப்புப் பணியை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கும் நேற்று கூட்டாகத் தொடக்கி வைத்தனர். ஜொகூர் நீரிணைப் பகுதியில் உள்ள ஆர்டிஎஸ் லிங்க் திட்ட நிர்மாணிப்புத் தளத்தில் 17.1 மீட்டர் நீளம் கொண்ட காங்கிரிட் தூண்களை இணைக்கும் பணியை அவர்கள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.மலேசியாவின் பியர் (கப்பல்துறை) 47க்கும் சிங்கப்பூரின் பியர் 48க்கும்…

நம்பிக்கையில்லா தீர்மானத்தை முடிந்தால் கொண்டு வாருங்கள்!
|

நம்பிக்கையில்லா தீர்மானத்தை முடிந்தால் கொண்டு வாருங்கள்!

இஸ்கண்டார் புத்ரி, ஜன. 12 –ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்பினால், மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருமாறு எதிர்க்கட்சிகளுக்குச் சவால் விடப்படுகிறது என்று, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகளுக்கு ஒற்றுமை அரசாங்கம் வாய்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், ஓராண்டு காலமாக எதிர்க்கட்சியினர் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர் என்று அன்வார் தெரிவித்தார். “(நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்காக) நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றோம். ஓராண்டு கடந்து விட்டது. ஒவ்வொரு நாளும்…

லோவின் குழந்தைகளை இஸ்லாமிய மதமாற்றம் செய்தது செல்லாது: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
|

லோவின் குழந்தைகளை இஸ்லாமிய மதமாற்றம் செய்தது செல்லாது: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்,ஜன.10-மதம் மாறிய மூன்றுக் குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக முஸ்லீம் மதத்திற்கு மாற்றியதை ரத்து செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஏகமனதாகத் தீர்பளித்தது.தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங்கின் மூன்று பிள்ளைகளும் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறியது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது மேல்முறையீட்டு நீதிமன்றம்.கடந்த 2020ஆம் ஆண்டு லோவின் முன்னாள் கணவரான முஹம்மத் நகாஷ்வரன் தமது மூன்று பிள் ளைகளையும் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்பது குறிப்பிடத்தகது.மூன்று நீதிபதி கொண்ட அமர்விற்கு தலைமையேற்ற நீதபதி ஹடாரியா சையத் இஸ்மாயில்,…

தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு மரியாதை தர வேண்டும்

தமிழ் வாழ்த்துப் பாடலுக்கு மரியாதை தர வேண்டும்

எம்.முருகன் கோலாலம்பூர், ஜன.10-அண்மையில் திராவிடக் கழக மாநாட்டுக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும் பொழுது தொலைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக, யாரும் அவரைக் கண்டிக்காமல், அதனைக் காணொலியாகப் பதிவு செய்து அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. என்னை பொறுத்தவரையில், இச்செயல் அந்த இடத்திலேயே கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஞான சைமன்…

எஸ்.எம்.இ கோர்ப்பின் மேம்பாட்டிற்குப் மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சகம் ஒத்துழைக்கும்
|

எஸ்.எம்.இ கோர்ப்பின் மேம்பாட்டிற்குப் மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சகம் ஒத்துழைக்கும்

(ஜே.யோகராஜன், ச.சர்வேந்திரன்) கோலாலம்பூர், ஜன. 10 –எஸ்.எம்.பி கோர்ப் ஏற்பாட்டில் பிளாட்டினம் சென்ட்ரல், கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய தொழில்முணைவோர் மேம்பாட்டு அமைச்சினரோடு நிகழ்ந்த சந்திப்பில்டத்தோ ரமணன் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டார்.எஸ்.எம்.இ கோர்பானது ஏராளமான செயல்திட்டத்தையும் வழிவகைகளையும் 2024இல் தொழில்முனைவோருக்குத் திரளாக திரட்டியுள்ளது என்று டத்தோ ரமணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எஸ்.எம்.இ கோர்ப்பின் செயல்திட்டங்களாக, கடனுதவி, வர்த்தக உரிமம், திறன்படும் வர்த்தக மேம்பாடு, பீப் எனும் இஸ்லாமிய வர்த்தக மேம்பாட்டு திட்டம், ஜிஇபி எனும் வெளிதொடர்பு…

வெ. 30 லட்சம் நிதி என்ன ஆனது? அன்வார் கேள்வி

வெ. 30 லட்சம் நிதி என்ன ஆனது? அன்வார் கேள்வி

புத்ராஜெயா, ஜன. 10-சபா மலேசியா பல்கலைக்கழகத்தின் (யூஎம்எஸ்) குடிநீர் விநியோக பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கடந்தாண்டு முப்பது லட்சம் வெள்ளி நிதியுதவிக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்தது. ஆனால்இதுவரை அப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. அந்தப் பணம் என்ன ஆனது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கேள்வியெழுப்பினார். அப்பல்கலைக்கழகத்திற்கு நேற்றுமுன்தினம் உயர்கல்வியமைச்சர் ஸம்ரி அப்துல் காடிர் வருகை மேற்கொண்ட வேளையில், குடிநீர் விநியோகம் மோசமாக இருப்பது குறித்து அவரிடம் மாணவர்கள் புகார் கூறினர் என்று நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்….