GLC – GLIC  இரண்டும் மலேசியப் பொருளாதாரத்தை நகர்த்தும் சக்திகள்! – அன்வார்
|

GLC – GLIC  இரண்டும் மலேசியப் பொருளாதாரத்தை நகர்த்தும் சக்திகள்! – அன்வார்

அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட glc நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டglic முதலீட்டு நிறுவனங்கள் லாபத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல், தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வலியுறுத்தினார். “முன்னோக்கிச் செல்லும்போது, GLICகள் மற்றும் GLCக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை நிதி அமைச்சு  ஒருங்கிணைக்கும் என்று கூறினார். மேலும், மாதாந்திர கூட்டங்களில் கலந்துகொள்ள ஜிஎல்சி மற்றும் ஜிஎல்ஐசிக்களும் அழைக்கப்பட்டதாக அவர் கூறினார். மதானியின் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதில்…

மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் – தற்காலிகமாக மூடப்படுகிறது!
|

மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் – தற்காலிகமாக மூடப்படுகிறது!

மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரான் ஶ்ரீ மரத்தாண்டவர் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, இன்று தொடங்கி அடுத்த அறிவிப்பு வரும் வரை ஆலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஆலய நிர்வாகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனை ஆலய நிர்வாகம் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நாட்டின் பிரசித்தி பெற்ற திருத்தலமான இவ்வாலயத்திற்கு இம்மாதத்தில்தான் பக்த பெருமக்கள் அதிக அளவில் பாதயாத்திரை செல்வார்கள்…

பகடிவதை தொடர்பாக 35 வாக்குமூலங்கள்! – காவல்துறை அறிவிப்பு!
|

பகடிவதை தொடர்பாக 35 வாக்குமூலங்கள்! – காவல்துறை அறிவிப்பு!

பகடிவதையால் பள்ளியின் விடுதியில் இருந்து மாணவர் ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான விசாரணையை காவல்துறையினர் கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர் உட்பட, சுமார் 35 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ அல்லாவுடின் அப்துல் மஜிட் கூறினார். விசாரணை ஆவணங்களை துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கு முன்பு இன்னும் பல நபர்களின் உரையாடல்கள் பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார். கடந்த…

வெள்ளத்தில் ஜொகூர்… அபாயகரமான அளவில் 6 ஆறுகள்!
|

வெள்ளத்தில் ஜொகூர்… அபாயகரமான அளவில் 6 ஆறுகள்!

வெள்ளத்தில் ஜொகூர்… அபாயகரமான அளவில் 6 ஆறுகள்! ஜொகூரில் தொடர்ந்து வெள்ள நிலைமை மோசமடைந்து வருகிறது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 3,322 பேருடன் ஒப்பிடும்போது, இன்று காலை 8 மணி நிலவரப்படி 6,564 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தா திங்கி, குளுவாங் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளில் இருந்து அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் அஸ்மி ரோஹானி ஓர் அறிக்கையில் தெரிவித்தார். ஆறு மாவட்டங்களில் இதுவரை மொத்தம்…

நடப்புத் திட்டங்கள் குறித்து மாதாந்திர அறிக்கைகள் வழங்க வேண்டும்! – பிரதமர் வலியுறுத்து!
|

நடப்புத் திட்டங்கள் குறித்து மாதாந்திர அறிக்கைகள் வழங்க வேண்டும்! – பிரதமர் வலியுறுத்து!

அரசு நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளின்  துறைத் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள்  நடப்புத் திட்டங்கள் குறித்து மாதாந்திர அறிக்கைகளை வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். இன்று நடைபெற்ற பிரதமர் துறையின் ஊழியர்கள் உடனான மாதாந்திர கூட்டத்தில்  இதனைத் தெரிவித்த அன்வார், அறிக்கையை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுகி அலியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்.  என்ன நடந்தது என்பதற்கான மாதாந்திர அறிக்கை இருக்க வேண்டும். திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான முயற்சியில்…