அரசாங்கத்தைக் கவிழ்க்க ‘துபாய் நகர்வு’ எதற்கு? ‘மாமா கடை நகர்வே’ போதும்!
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், ‘துபாய் மூவ்’ என்று பெயரிடப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்கும் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை பெஜுவாங் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ மர்சுகி யாஹ்யா கடுமையாக மறுத்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சில ஒற்றுமை அரசாங்க எம்.பி.க்கள் மற்றும் பெரிகாத்தான் தேசிய தலைவர்களுடன் டாக்டர் மகாதீர் எந்த ரகசிய சந்திப்பிலும் ஈடுபடுவது சாத்தியமில்லை என்று மர்சுகி விளக்கினார். கடந்த சில வாரங்களாக டாக்டர் மகாதீர் வெளிநாட்டில் இல்லாததே இதற்குக் காரணம்…
PADU – வறுமையை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றும்!
Hardcore ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடு எனப்படும் தேசிய முதன்மை தரவுத்தளம் பயனாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். மேலும் வறுமையை ஒழிப்பதற்கு மிக முக்கியப் பங்காற்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2024ஆம் ஆண்டிற்கான மானியங்களை முறையாக வழங்குவதற்கு இந்தத் தளம் உறுதுணையாக இருக்கும். இதற்கு முன்னர் அமலாக்கப்பட்ட திட்டங்கள், மானியங்கள் எல்லாம் முறையாக உரிய மக்களுக்குச் சென்று சேர்வதில் சிக்கல் இருந்தது….
யாராக இருந்தாலும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினால் நடவடிக்கைதான்! – பிரதமர் எச்சரிக்கை!
பிரதமர் அல்லது அமைச்சரவை உறுப்பினர் யாராக இருந்தாலும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார். நீங்கள் பிரதமராக இருந்தாலும், நிதியமைச்சராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் சரி, நாட்டின் பணத்தை திருடினாலோ, நாட்டின் செல்வத்தை தவறாகக் கையாண்டாலோ அவர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமுமின்றி, நாட்டைக் காப்பாற்ற நாங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என பிரதமர் தெரிவித்தார் துன் மற்றும் டான்ஸ்ரீ உட்பட யாருடைய…
ஆட்டத்தை மாற்றப் போகும் GAME CHANGER
புத்ராஜெயாவில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘சென்ட்ரல் டேட்டாபேஸ் ஹப்’ எனப்படும் மத்திய தரவுத்தளமான பாடு (PADU) , உதவி மற்றும் மானியங்களின் விநியோகம் திறம்பட மற்றும் அவர்களின் இலக்கு குழுக்களை சென்றடைவதை மட்டும் உறுதி செய்யாது, இது அரசாங்கத்தின் தகவல் கசிவுகளைத் தடுக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், பாடுவை வைத்து, தகுதியில்லாதவர்கள் – 3.5 மில்லியன் வெளிநாட்டினர், செல்வந்தர்கள் மற்றும் உயர் வருமானம் உள்ளவர்களை அடையாளம் காண முடியும் என்பதால், அவர்கள் உதவிகளைப் பெற முடியாது என்று…
‘துபாய் நகர்வு’ – அது முன்கூட்டியே எனக்குத் தெரியும்! – ஜாஹிட் ஹமிடி
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சம்பந்தப்பட்ட நபர்கள் தரையிறங்குவதற்கு முன்பே “துபாய் நகர்வு” பற்றி தனக்குத் தெரியும் என்று துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சிலர் அங்கு சென்ற தருணத்தில் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சில அரசாங்கப் பிரதிநிதிகளின் அண்மைய ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பயணம் துபாய் நகர்வு பற்றிய ஊகங்களை எழுப்பின….
ஜப்பான் நிலநடுக்கம் – அரசாங்கம் நிலைமையைக் கண்காணிக்கிறது! – அன்வார்
ஜப்பானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இஷிகாவா பகுதியில் உள்ள மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் தங்கள் ஆறுதலைத் தெரிவித்தனர். வெளியுறவு அமைச்சு மற்றும் ஜப்பானில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து வருவதாக அன்வார் தமது முக நூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடினமான மற்றும் சவாலான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிமையும் பொறுமையும் அமையட்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக,…