மகாதீர் சுயநினைவுடனேதான் இருக்கின்றார்
கோலாலம்பூர், பிப். 20 –முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது சுயநினைவுடனேதான் இருப்பதாகவும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும், அவருக்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று நேற்று கூறியது. நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த டாக்டர் மகாதீர், ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று, தமது பெயரை தெரிவிக்க மறுத்துவிட்ட அந்த வட்டாரம் கூறியது. ஓர் இருதய நோயாளியான மகாதீர், கிருமி தொற்றுக்குச் சிகிச்சை பெறுவதற்காக, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி கோலாலம்பூர்,…
