2022ஆம் ஆண்டில் 54 % மருத்துவ அதிகாரிகள் பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகினர்
கோலாலம்பூர், பிப். 29-நாட்டின் 100,696 மருத்துவ அதிகாரிகளில் 54 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் கடந்தாண்டில் பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகியுள்ளனர். தனியார்துறையில் சேர்ந்து பணியாற்றுவதற்காக அவர்கள் அங்கிருந்து விலகியுள்ளனர் என்று மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது. பக்காத்தான் ஹராப்பானின் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபோங் கூய் லுன் கேட்ட துணைக்கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோது சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸூல்கிப்ளி அமாட் இதனைத் தெரிவித்தார்.பொதுச்சேவைத்துறையிலிருந்து விலகிய மருத்துவர்களில் 45 விழுக்காட்டினர் தற்போது வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு நடத்திய…