எஃபிஐ பயங்கரவாதிகள் பட்டியலில் மூன்று மலேசியர்கள்
புத்ராஜெயா, பிப். 20-அமெரிக்காவின் கூட்டரசு புலனாய்வுத்துறையின் பயங்கரவாதிகள் கண்காணிப்பு மையத்தின் பெயர்ப் பட்டியலில் மூன்று மலேசியர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இது பற்றி அந்தப் புலனாய்வு அமைப்பிடமிருந்து கூடுதல் விளக்கம் கோரப்படும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று தெரிவித்தார். அந்த மூன்று நபர்கள் பற்றிய விவரங்களை எஃபிஐ கோரியிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். ஆனால், என்ன காரணங்களால் அவர்கள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.இது குறித்து தெளிவான விளக்கம் பெறுவதற்காக இரண்டு…