இந்திராகாந்தியின் கணவர் நாட்டை விட்டுவெளியேறுவார் என்று எதிர்பார்க்கவில்லை முன்னாள் ஐஜிபி சாட்சியம்
கோலாலம்பூர், பிப். 6-இந்திராகாந்தியின் முன்னாள் கணவர் தங்களின் மகளுடன் நாட்டை விட்டு தப்பியோடுவார் என போலீசார் எதிர்பார்க்கவில்லை என்று தேசியப் போலீஸ்படையின் முன்னாள் தலைவர் ( ஐஜிபி) அப்துல் ஹமீட் பாடோர் நேற்றுத் தெரிவித்தார். முகமது ரிடுவான் அப்துல்லா எனும் அந்நபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு, அவர் தமது மகள் பிரசன்னா டிக்சாவுடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வார் என்பதற்கான எந்த அறிகுறிகளும் கிடைக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் நேற்று சாட்சியமளித்தபோது அவர் கூறினார். ரிடுவானிடமிருந்து பிரசன்னாவை…